தமிழ்நாட்டில் 36 இடங்களை.. தட்டி தூக்கும் திமுக "இந்தியா" கூட்டணி.. பாஜக கூட்டணிக்கு எவ்வளவு? சர்வே
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுகவின் இந்தியா கூட்டணி எத்தனை இடங்கள் வெல்லும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி எத்தனை இடங்களை வெல்லும் என்று கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த தேர்தலுக்கு இன்னும் 7-8 மாதங்களே உள்ளன. தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் 26 கட்சிகள் சேர்ந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதில் திமுக, காங்கிரஸ் பிரதான கட்சியாக உள்ளது.

இன்னொரு பக்கம் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தி வருகிறது. இந்த நிலையில்தான் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் அடுத்தடுத்து வெளியாக தொடங்கி உள்ளன. அதன்படி 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. பாஜக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று சமீபத்தில் வெளியான கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்தது.
PCSurveysIndia அதாவது Political Critic என்ற அமைப்பு இந்த கருத்து கணிப்பை வெளியிட்டது. அதில் பாஜகவின் என்டிஏ கூட்டணி : 255 இடங்கள் எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி: 225 இடங்கள் மற்ற கட்சிகள் : 63 இடங்கள் வெல்லும் என்று இந்த அமைப்பு கணிப்பு வெளியிட்டு உள்ளது. லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 38 இடங்களை திமுக காங்கிரசின் இந்திய கூட்டணி வெல்லும் என்றும், அதிமுக - பாஜக கூட்டணி ஒரே ஒரு இடத்தில் வெல்லும் என்றும் இந்த கருத்து கணிப்பு தெரிவித்தது.
புதிய கருத்து கணிப்பு: இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுகவின் இந்தியா கூட்டணி எத்தனை இடங்கள் வெல்லும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி எத்தனை இடங்களை வெல்லும் என்று புதிய கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்து உள்ளது.
ஸ்மால் பாக்ஸ் இந்தியா சர்வே என்ற அமைப்பு இந்த புதிய கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,
தமிழ்நாட்டில் திமுகவின் இந்தியா கூட்டணி - 36 இடங்களை வெல்லும்
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி - 03 இடங்களை வெல்லும்
தமிழ்நாட்டில் கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களில்வென்றது. அதிமுக 1 இடத்தில் வென்றது. இந்த முறை திமுக கூட்டணி 2 இடங்களை இழக்கும். பாஜக கூட்டணி கூடுதலாக இரண்டு இடங்களை பெறும். அதாவது தமிழ்நாட்டில் இருந்து பாஜக கூட்டணிக்கு 3 எம்பிக்கள் வருவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது. இவர்கள் பாஜக கட்சியா, அதிமுக கட்சியா என்பது தெரிவிக்கப்படவில்லை.
இது போக கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி - 18 (-1) இடங்களை வெல்லும்
வலதுசாரி கூட்டணி - 02 (+1) இடங்களை வெல்லும்
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி - ஒரு இடத்தில் கூட வெல்லாது என்று கணிக்கப்பட்டு உள்ளது.
கணிப்பு: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இப்போதே தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் வெளியாக தொடங்கி உள்ளன. பல்வேறு அமைப்புகள் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
ஆனால் இந்த கருத்து கணிப்புகள் எல்லாமே அப்படியே நடக்கும் என்றும் சொல்ல முடியாது. காரணம் தேர்தலுக்கு இன்னும் பல காலம் உள்ளது. கிட்டத்தட்ட 8 மாதங்கள் உள்ளன. அப்படி இருக்க என்ன வேண்டுமென்றாலும் அரசியல் களத்தில் நடக்கலாம்.
8 மாதங்கள் என்பது தேர்தல் அரசியல் களத்தில் மிக நீண்ட காலம் ஆகும். அதனால் கருத்து கணிப்புகள் அப்படியே நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் அரசியல் ரீதியாக கருத்து கணிப்புகள் ஒரு பிம்பத்தை உருவாகும். முக்கியமாக அரசியல் ரீதியாக தேர்தல் இப்படி செல்ல வாய்ப்பு உள்ளது என்று கணிப்பை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications