ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்!
சென்னை: திமுக கூட்டணியில் ஒரே நாளில் 4 கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் இன்று கையெழுத்து ஆகியுள்ளது. முக்குலத்தோர் புலிப்படை, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழர் தேசம் கட்சி, எஸ்.டி.பி.ஐ ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருவதால், தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

திமுக கூட்டணி கட்சிகள்
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்படி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், தேமுதிகவுக்கு 10 தொகுதிகள், விசிகவுக்கு 8 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிக்கு தலா 2 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதில் 7 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் மற்ற கட்சியினர் போட்டியிடவுள்ளனர். இதனிடையே, திமுக கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மனிதநேய ஜனநாயகக் கட்சி, எஸ்.டி.பி.ஐ, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு திமுக இன்று தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளது திமுக, அதன்படி, மனிதநேய ஜனநாயகக் கட்சி மற்றும் முக்குலத்தோர் புலிப்படை, எஸ்.டி.பி.ஐ, தமிழர் தேசம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 4 கட்சிகளும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.
இன்று ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு
"திமுக கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்தத் தொகுதி என்பதை முதலமைச்சர் அறிவிப்பார். உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி" என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.
"திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென ஒப்பந்தத்தில் கையெழுத்து. எந்தத் தொகுதியில் போட்டி என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்" என தமிமுன் அன்சாரி பேட்டி அளித்துள்ளார்.
"திமுக கூட்டணியில் தமிழர் தேசம் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென ஒப்பந்தம் கையெழுத்து. எந்தத் தொகுதி என்பதை முதலமைச்சர் அறிவிப்பார்" என அக்கட்சியின் தலைவர் கே.கே.செல்வகுமார் பேட்டி அளித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் - எஸ்.டி.பி.ஐ கட்சி தமிழ்நாடு தலைவர் வி.எம்.எஸ்.முகம்மது முபாரக் அவர்களும் இன்று (26-03-2026) போட்டியிடும் தொகுதி குறித்து கலந்து பேசியதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு
காங்கிரஸ் - 28 தொகுதிகள் (கை சின்னம்)
தேமுதிக- 10 தொகுதிகள் (முரசு சின்னம்)
விசிக - 8 தொகுதிகள் (பானை சின்னம்)
இந்திய கம்யூனிஸ்ட் - 5 தொகுதிகள் (கதிர் அரிவாள் சுத்தியல்)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 5 தொகுதிகள் (அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்)
மதிமுக - 4 தொகுதிகள் (3ல் உதயசூரியன் 1 தனி சின்னம்)
மமக - 2 தொகுதிகள் (உதயசூரியன்)
ஐயூஎம்எல் - 2 தொகுதிகள் (ஏணி சின்னம்)
கொமதேக - 2 தொகுதிகள் (உதயசூரியன்)
முக்குலத்தோர் புலிப்படை - 1 தொகுதி (உதயசூரியன்)
மனிதநேய ஜனநாயக கட்சி - 1 தொகுதி (உதயசூரியன்)
தமிழர் தேசம் கட்சி - 1 தொகுதி (உதயசூரியன்)
எஸ்.டி.பி.ஐ - 1 தொகுதி (உதயசூரியன்)
ஆகமொத்தம் 234 தொகுதிகளில், கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 70 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதம் 164 தொகுதிகள் உள்ளன. மொத்தமாக 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னம் 175 இடங்களில் போட்டியிடுகிறது.
-
4 மணி நேர ‘உறக்கம்’.. பொறுப்பாளர்களை போனில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் ஸ்டாலின்! அறிவாலய அலர்ட்! -
தவெகவில் ஒரே ஒரு எம்.எல்.ஏ? நிலைமை என்ன ஆகும்? - சட்டசபையில் சமாளிப்பாரா விஜய்? -
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்! -
உங்களுக்கு இன்னும் பூத் சிலிப் வரலையா? வெறும் 2 நிமிடத்தில் டவுன்லோடு செய்யலாம்.. எப்படி? -
பவன் பாதி.. ஜெகன் மீதி! அரசியலிலும் ரீமேக்கா? வாட் ப்ரோ.. விஜயை வெளுக்கும் நெட்டிசன்கள்! என்னாச்சு? -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
"எங்க ஏரியாவுக்கு வா"! சுந்தர் சி முன்பே "ஸ்டைல் பாண்டி" டயலாக் சொன்ன எடப்பாடி! குலுங்கிய மதுரை! -
டெல்லி பூதமும்.. அறிவாலயம் யுக்தியும்.. திமுகவின் ஸ்மார்ட் தேர்தல் அஸ்திரம்! பாஜக எதிர்பார்க்கலயே -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்!











Click it and Unblock the Notifications