பகையும் இல்லை; உறவும் இல்லை; மோடி வருகைக்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரம்!
சென்னை: புதிய மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக அடுத்த மாதம் பிரதமர் மோடி தமிழகம் வரும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் புதிதாக கட்டப்படுள்ள 11 மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக ஜனவரி 12-ம் தேதி மதுரை வருகிறார் பிரதமர் மோடி. அங்கிருந்து அவர் விருதுநகர் செல்வதற்கான முன்னேற்பாடுகளை பிரதமர் அலுவலகமும் தமிழக அரசும் செய்து வருகிறது.
பொங்கல் பரிசாக தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி தருவதாக பாஜகவினர் பரப்புரை செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு திமுகவினரும் சளைக்காமல் சமூகவலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதனிடையே, பிரதமரின் தமிழக வருகை குறித்த நிகழ்ச்சியை பகையும் இல்லை, உறவும் இல்லை என்கிற ரீதியிலேயே திமுக கருதுகிறதாம்.
பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு இந்தமுறை கடந்தகாலங்களை போல் எதிர்ப்புகள் கிளம்பாது எனத் தெரிகிறது.
மருத்துவக்கல்லூரிகளுக்கான கட்டிட கட்டுமானப்பணி அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது என்பதால், அவர்கள் தரப்பிலும் பிரதமர் மோடியை வரவேற்க தயாராகி வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மோடியுடன் அவர் ஒன்றாக ஒரே மேடையில் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் மருத்துவக் கல்லூரி திறப்பு விழா நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
“அமைச்சரவையில் இடம்பெறுவோம்.. ஆனால்!” நிலைப்பாட்டை விளக்கிய.. சிபிஎம், சிபிஐ தலைவர்கள்! -
சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி, பாமக போட்ட பிச்சை! சி.வி.சண்முகம் காட்டம் -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
மமதாவின் கோட்டை தகர்கிறதா? அதிருப்தி எம்பிக்கள் எடுத்த அதிரடி முடிவு!












Click it and Unblock the Notifications