தவெகவை வீழ்த்த ஸ்டாலினின் வியூகம்! மீண்டும் தலைப்புச் செய்திகளில் திமுக? அறிவாலயத்தின் புதிய திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைமை கட்சியின் உட்கட்சி தேர்தலை மிக தீவிரமாக பெரிய திட்டமிடலுடன் நடத்த முடிவு செய்துள்ளதாம்.

தமிழக வெற்றி கழகம் தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு வந்த பிறகு, அண்ணா அறிவாலயத்தில் பெரிய அளவில் சத்தமே இல்லாமல் போனது. தோல்விக்கு பிறகு சில மாதங்களாகவே, திமுக பற்றி மக்கள் மத்தியில் ஒரு பேச்சு ஓடத் தொடங்கியது. ஆட்சி அதிகாரம் கையில் இல்லாததால் திமுக சோர்வடைந்து விட்டது என்றும், கட்சியில் புது வேகம் இல்லை என்றும் பலரும் பேச ஆரம்பித்தார்கள்.

dmk MK Stalin TVK

தெருவில் இறங்கிப் போராடிப் பழக்கப்பட்ட ஒரு கட்சிக்கு, தோற்பதை விட பேசப்படாமல் சும்மா இருப்பதுதான் பெரிய ஆபத்து.

இந்த அமைதியை உடைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அதற்காக கட்சியில் உடனடியாக உட்கட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளார். இது வழக்கமாக நடக்கும் தேர்தல் மட்டுமல்ல; கட்சிக்குள் ஒரு போட்டியை உருவாக்கி, அதன் மூலம் மீண்டும் மக்கள் கவனத்தை ஈர்க்கும் திட்டம்.

திமுகவின் தலைமை ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்து வைத்துள்ளது. கட்சியில் எல்லாரும் அமைதியாக இருந்தால், அது கட்சி முடங்கிப் போய்விட்டது போலத் தோன்றும். அதே நேரத்தில், ஒவ்வொரு ஊரிலும், வார்டிலும் பதவிகளுக்கு ஆட்கள் மோதிக்கொண்டால் தான் கட்சி சுறுசுறுப்பாக இருக்கிறது என்று அர்த்தம்.

சின்ன சின்ன சண்டைகள் வரலாம், கூச்சல் குழப்பங்கள் வரலாம்

பதவிகளுக்கு போட்டி வரும்போது சின்ன சின்ன சண்டைகள் வரலாம், கூச்சல் குழப்பங்கள் வரலாம். ஆனால், அப்படி நடந்தாலும் பரவாயில்லை என்பதுதான் தலைமை எடுக்கும் முடிவு. பதவிக்கு இவ்வளவு பெரிய சண்டை நடக்கிறது என்றால், கட்சியில் இன்னும் பெரிய பலம் இருக்கிறது என்பதை ஆளும் கட்சிக்கும் மக்களுக்கும் அது காட்டும்.

அடுத்து, தொண்டர்கள் பற்றிய பேச்சையும் மாற்ற வேண்டும். ஆட்சி போனதும் தொண்டர்கள் எல்லாம் கலைந்து போய்விட்டார்கள் என்று எதிர்க்கட்சிகள் பேச ஆரம்பித்தன. அந்தப் பேச்சை உடைக்க வேண்டும் என்றால் தேர்தல் தான் சரியான வழி. ஆட்சி இல்லை என்றாலும் திமுக தொண்டர்கள் பின்வாங்க மாட்டார்கள், இன்னும் தீவிரமாக வேலை செய்வார்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இப்போது வந்துள்ளது.

பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் மோதல்

இதற்கு ஒரு உதாரணத்தையும் திமுக நிர்வாகிகள் சொல்கிறார்கள். பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் மோதல் வந்தபோது, அது பெரிய அளவில் பேசப்பட்டது. சமூக வலைதளங்களில் இளைஞர்கள் பலரும் அதைப்பற்றி பேசினார்கள். இன்றைய இணையதள உலகத்தில், அமைதியாக வேலை செய்தால் யாருக்கும் தெரியாது. கொஞ்சம் சத்தமும் பரபரப்பும் இருந்தால் தான் ஊடகங்களும் மக்களும் திரும்பிப் பார்ப்பார்கள்.

தொண்டர்களை நேரடியாக மோதிப் பார்க்க தலைமை முடிவு

கட்சிக்குள் மோதல் வந்தால் சிலருக்கு வருத்தம் வரலாம். ஆனால், யார் உண்மையான தொண்டர், யார் பதவிக்காக மட்டுமே வந்தவர் என்பது இதன் மூலம் தெரிந்துவிடும். அதனால் எந்த சமரசமும் செய்யாமல், தொண்டர்களை நேரடியாக மோதிப் பார்க்க தலைமை முடிவு செய்துள்ளது. கட்சியைப் பற்றி யாரும் பேசாமல் மறந்து போவதை விட, சண்டை போட்டாவது செய்திகளில் இருப்பதே நல்லது என்று திமுக இப்போது களமிறங்குகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+