சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீக்கிரம் ஏதாவது பண்ணுங்க.. தலைமைக்கு சென்ற மெசேஜ்.. எதிர்பார்க்காத ஸ்டாலின்.. கலக்கத்தில் திமுக!

Google Oneindia Tamil News

சென்னை: மண்ணச்சநல்லூர் தி.மு.க வேட்பாளர் கதிரவனுக்கு எதிராக பெரிய அளவில் கோஷ்டி மோதல்கள் நிலவி வருவதாக திமுகவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இது தொடர்பாக திமுக தலைமைக்கும் மெசேஜ் சென்று இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்ததில் இருந்தே திமுக, அதிமுக இரண்டிலும் நிறைய கோஷ்டி மோதல்கள் நிலவி வருகிறது. இரண்டு கட்சியிலும் இடம் கிடைக்கவில்லை என்று கூறி நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

 கிளம்புங்க போகலாம்.. ஆர்டர் போட்ட சசிகலா.. கடைசியில் பிளானை மாற்றி.. ஏன் இப்படிலாம்? சரியில்லையே! கிளம்புங்க போகலாம்.. ஆர்டர் போட்ட சசிகலா.. கடைசியில் பிளானை மாற்றி.. ஏன் இப்படிலாம்? சரியில்லையே!

அதிமுகவில் சில எம்எல்ஏக்கள் சுயேட்சையாக போட்டியிடும் நிலைமை கூட ஏற்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் திமுக எம்எல்ஏ சரவணன் போன்றவர்கள் பாஜகவிற்கு தாவி உள்ளனர்.

நிலைமை

நிலைமை

நிலைமை இப்படி இருக்க திமுகவில் மண்ணச்சநல்லூர் தி.மு.க வேட்பாளர் கதிரவனுக்கு எதிராக பெரிய அளவில் கோஷ்டி மோதல்கள் எழுந்துள்ளது. மண்ணச்சநல்லூர் வேட்பாளராக கதிரவன் அறிவிக்கப்பட்டதில் இருந்தே திமுக நிர்வாகிகள் பலர் அந்த தொகுதியில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களாம். இவரின் தேர்வை உள்ளூர் நிர்வாகிகள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

விரும்பவில்லை

விரும்பவில்லை

கட்சி தலைமையிடம் இவரை தேர்வு செய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டோம் .. பல பேர் விருப்ப மனுக்களை அளித்தனர். அவர்களை தேர்வு செய்யாமல் கதிரவனை தேர்வு செய்துள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மண்ணச்சநல்லூர் திமுக நிர்வாகிகள் புகார் வைக்கிறார்கள். இந்த புகாருக்கு என்ன காரணம் என்று விசாரித்தோம்.

காரணம்

காரணம்

மண்ணச்சநல்லூரில் பல முக்கிய நிர்வாகிகள் உள்ளனர் . அவர்களை விட்டுவிட்டு சீனியர் இல்லாத கதிரவனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். அவர் மற்ற நிர்வாகிகளை அனுசரித்து போகவில்லை. தனியாக வேலை பார்க்கிறார். அவர் வந்தால் எங்களுக்கு கட்சியிலும், தொகுதியிலும் மதிப்பு இருக்காது என்று மூத்த நிர்வாகிகள் சிலர் கருதுகிறார்கள். இதுதான் கதிரவனை திமுக நிர்வாகிகள் சிலர் எதிர்க்க காரணம்.

உண்மை என்ன

உண்மை என்ன

ஆனால் களத்திலோ கதிரவனுக்கு நல்ல ஆதரவு இருக்கிறதாம். பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத் தலைவர் சீனிவாசனின் மகன்தான் கதிரவன். மக்கள் செல்வாக்கு இவருக்கு அதிகம் இருப்பதாகவே பேசிக்கொள்கிறார்கள் . போகிற இடங்களில் எல்லாம் மக்கள் இவருக்காக ஆதரவு அளிக்கிறார்கள் என்றே கூறப்படுகிறது. ஆனாலும் திமுக நிர்வாகிகள் மட்டும் இவருக்காக தேர்தல் பணிகளை பெரிதாக செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

தேர்தல் பணிகள்

தேர்தல் பணிகள்

இது தொடர்பாக கதிரவன் தரப்பும் தலைமைக்கு மெசேஜ் அனுப்பி உள்ளது. நிர்வாகிகள் யாரும் வேலை பார்ப்பது இல்லை.. தேர்தல் பிரச்சாரம் முடங்கி உள்ளது.. சீக்கிரம் ஏதாவது செயயுங்கள் என்று புகார் சென்றுள்ளது. முன்னதாக தென்காசியில் தேர்தல் பணிகளை செய்யவில்லை என்று மாவட்ட செயலாளர் துரையின் பதவி பறிக்கப்பட்டது.

வாய்ப்பு

வாய்ப்பு

அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின் இந்த பிரச்சனை பற்றியும் விசாரித்து வருகிறோம். தேர்தல் பணிகளை யார் செய்யவில்லை. யாரெல்லாம் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று ஸ்டாலின் விசாரித்து வருகிறாராம். விரைவில் முக்கிய முடிவுகளை எடுப்பார், முக்கிய மாற்றங்கள் நடக்கும் என்கிறார்கள்.

English summary
DMK internal issue affects the campaign in Manachanallur ahead of TN Assembly Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X