திமுக கூட்டணிக்குள் வந்த புதிய கட்சி.. சிறுபான்மை வாக்குகளை மொத்தமாக அள்ள பிளான்! இணைந்தது எஸ்டிபிஐ
சென்னை: திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இன்று இணைந்துள்ளது எஸ்டிபிஐ கட்சி. திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்து வரும் நிலையில், தற்போது எஸ்டிபிஐ கட்சியை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு திமுக அழைத்தது.
கடந்த தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி இடம்பெற்று இருந்தது. தற்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதால் அந்த கூட்டணியிலிருந்து எஸ்டிபிஐ கட்சி வெளியேறி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இதுவரை கூட்டணி குறித்த முடிவை அக்கட்சி எடுக்கவில்லை. எஸ்டிபிஐ கட்சி திமுக கூட்டணியில் இணையுமா என்ற கேள்வி எழுந்து வந்தது.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்கட்சியான அதிமுகவும், தவெக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மமக, மநீம, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் தேமுதிகவும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இதனால் திமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக மாறி வரும் நிலையில், தற்போது எஸ்டிபிஐ கட்சியும் திமுக கூட்டணியில் இடம்பெற உள்ளது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட SDPI திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது.
தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்துள்ளதால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறிய எஸ்டிபிஐ திமுக கூட்டணியில் இணையவுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆலோசனை நடத்தியிருந்தார். அதைத்தொடர்ந்து, பல்வேறு விவகாரங்களில் திமுகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறது எஸ்டிபிஐ.
இந்த நிலையில் இன்று திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பங்கேற்க எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பட்டியலை SDPI கட்சி வழங்கி உள்ளது.
SDPI கட்சிக்கு 1 அல்லது 2 தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் ஏற்கனவே மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் உள்ளன. இந்நிலையில், சிறுபான்மையின வாக்குகளை மேலும் ஒருமுகப்படுத்தும் நோக்கில் எஸ்டிபிஐ கட்சியையும் திமுக கூட்டணியில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், "திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும். திமுகவிடம் 3 தொகுதிகள் கேட்டுள்ளோம். பரிசீலித்துச் சொல்வதாக கூறியுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications