O Panneerselvam: கூட்டணிக்கு வாங்க.. ஓ பன்னீர் செல்வத்துக்கு திமுக கொடுத்த ஆஃபர்.. பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் திமுக தனது கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு தனியாக செயல்பட்டு வரும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தை கூட்டணிக்குள் கொண்டு வர திமுக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர், விஜயின் தவெக என 4 முனை போட்டி நிலவ உள்ளது.
திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்து களமிறங்கும் நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து போட்டியிடுகிறது.

கூட்டணியை பலப்படுத்தும் திமுக
தவெக சார்பில் விஜய் கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் தற்போது வரை எந்த கட்சியும் அவரது தலைமையை ஏற்கவில்லை. இதற்கிடையே தான் திமுகவும், அதிமுகவும் தங்களின் கூட்டணியை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக உள்ளன.
தற்போது வரை பாமக நிறுவனர் ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்தின் தேமுதிக, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், முன்னாள் முதல்வராக ஓ பன்னீர் செல்வத்தின் அதிமுதொஉமீக இன்னும் கூட்டணியை உறுதி செய்யவில்லை.
ஓ பன்னீர் செல்வத்துடன் பேச்சு
இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வத்தை திமுக கூட்டணிக்கு கொண்டு வருவது தொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திமுகவின் மூத்த தலைவர் ஒருவர், தொலைபேசியில் ஓ பன்னீர் செல்வத்தை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது புதிய கட்சியை தொடங்கி திமுகவில் இணையுங்கள். இல்லாவிட்டால் திமுகவில் இணைந்து செயல்பட அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி ஓ பன்னீர் செல்வத்தின் அரசியல் பலம் மற்றும் அவர் சார்ந்த முக்குலத்தோர் சமூகத்தில் அவரது செல்வாக்கு குறித்து தென்மாவட்ட அமைச்சர் ஒருவருடன் திமுக தலைமை ஆலோசனை மேற்கொண்டது.
அப்போது அந்த அமைச்சர், ‛‛ஓ பன்னீர் செல்வத்தால் கட்சிக்கு அதிகப்படியான வாக்குகளை பெற்று தர இயலாது. 2021 சட்டசபை தேர்தலில் 20 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி வாய்ப்புகளை டிடிவி தினகரனின் அமமுக கட்சி பறித்தது. டிடிவி தினகரன் போல் ஓ பன்னீர் செல்வம் இல்லை'' என்று கூறியுள்ளார்.
கதவை திறந்து வைத்திருக்கும் திமுக
இருப்பினும், ஓ பன்னீர் செல்வம், திமுக கூட்டணிக்கு வந்தால் அது பலமாக இருக்கும் என்று திமுக நம்புகிறது. விஜயின் அரசியல் வருகை, அதிமுக கூட்டணி பலமாவது, பல முனை போட்டி நிலவுவதால் திமுக யாரையும் மிஸ் செய்ய வேண்டாம் என்று நினைக்கிறது.
இதனால் ஓ பன்னீர் செல்வத்துக்கான கதவை திமுக இன்னும் மூடவில்லை என்று சொல்லப்படுகிறது. இறுதி முடிவு ஓ பன்னீர் செல்வம் வசம் உள்ளது. இதனால் அவர் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க உள்ளார்? என்பது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஓபிஎஸ் நிலைப்பாடு என்ன?
இதற்கு முக்கிய காரணம் பன்னீர் செல்வம் அதிமுகவில் இணைவதில் தான் விருப்பமாக உள்ளார். அவருக்கு அரசியலில் அடையாளம் கொடுத்து, முதல்வர் பதவியில் அமர வைத்தது அதிமுக தான். இதனால் அவர் அதிமுகவின் எதிரியாக உள்ள திமுகவில் இணைய தயங்குகிறார்.
அவரது விருப்பம் அதிமுகவாக தான் உள்ளது. இருப்பினும் ஓ பன்னீர் செல்வத்தை எந்த காரணம் கொண்டும் மீண்டும் அதிமுகவில் சேர்க்க முடியாது என்று அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார்.
தேமுதிகவுடன் பேச்சு
அதேபோல் தேமுதிகவுடனும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தேமுதிகவுக்கு 7 சட்டசபை தொகுதி, ஒரு ராஜ்யசபா எம்பி பதவியை வழங்க திமுக உறுதியளித்துள்ளதாகவும், விரைவில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் 173 இடங்களில் திமுக களமிறங்கியது. இந்த முறை திமுக 170 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ்












Click it and Unblock the Notifications