தலைவர்கிட்ட சொல்றேன்! உடைத்து பேசிய உதயநிதி.. "தேதி" குறித்த அறிவாலயம்.. சிக்கும் சர்ச்சை புள்ளி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வாய்ப்பு உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே பல்வேறு விவாதங்கள், செய்திகள் வெளியான நிலையில்தான்.. அறிவாலய வட்டாரங்கள் இதில் புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளன. திமுக தலைமை இதற்காக முக்கியமான திட்டம் ஒன்றை வகுத்து வருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கடந்த வருடமே அமைச்சர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதாவது திமுக ஆட்சி பொறுப்பேற்ற போதே உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று செய்திகள் வந்தன.

ஆனால் உதயநிதிக்கு அமைச்சர் பதவி எதுவும் வழங்கப்படவில்லை. அதே சமயம் அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்கள் பலர், அமைச்சர்கள் பலர் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வந்தனர்.

கோரிக்கை

கோரிக்கை

பல அமைச்சர்கள் இதில் தொடர் கோரிக்கைகளை வைத்தாலும் முதல்வர் ஸ்டாலின் இதில் நேரடியாக பதில் எதுவும் அளிக்கவில்லை. உதயநிதி ஸ்டாலினும், தலைமை முடிவு எடுக்கும் என்பது போல் மழுப்பலாக பதில் அளித்து வந்தார். ஆனாலும் கண்டிப்பாக உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்றே திமுக வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. அவர் பதவி ஏற்க போகும் துறைக்கான உத்தேச லிஸ்ட் ஒன்றும் கூட இணையத்தில் உலவி வந்தது.

சரி என்ன நடக்கும்?

சரி என்ன நடக்கும்?

இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினின் லண்டன் பயணத்திற்கு முன்பாக உதயநிதி அமைச்சர் ஆவார் என்று ஒன்இந்தியா தமிழ் செய்தியில் ஏற்கனவே நாம் குறிப்பிட்டு இருந்தோம். உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கிவிட்டு தான் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்வார். ஆட்சியில் முக்கிய பொறுப்புகளை வழங்கிவிட்டு தான் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணிப்பார் என்று குறிப்பிட்டு இருந்தோம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டோம்.

ஏற்பாடுகள்

ஏற்பாடுகள்

பெரும்பாலும் செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து இருந்தோம். இந்த நிலையில்தான் அதற்கு முன்பாக உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி திமுக அரசு பதவி ஏற்ற மே 7ம் தேதி அவருக்கு பதவி வழங்கப்படலாம் என்று திமுக வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. திமுக இந்த நாளை விமர்சையாக கொண்டாட உள்ளது.

ஒரு வருடம்

ஒரு வருடம்

ஆட்சி பொறுப்பேற்று ஒரு வருடம் ஆனதை பெரிய அளவில் கொண்டாட இவர்கள் திட்டமிட்டு உள்ளனர். அதே நாளில்தான் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க திமுக பிளான் செய்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அறிவாலயத்தில் தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய ஒரு அமைச்சரின் பதவி பறிக்கப்படலாம் என்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

கார்

கார்

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தும் காரில் புதிதாக முன் பக்கம் எக்ஸ்ட்ரா பிட்டிங் ஒன்று வைக்கப்பட்டது. இந்த பிட்டிங் இலச்சினை பொருத்துவதற்காக வைக்கப்படும் பிட்டிங் ஆகும். இதுநாள் வரை அவரின் காரில் இல்லாத பிட்டிங் தற்போது பொருத்தப்பட்டு உள்ளது. ஏனென்றால், காரில் இந்த பிட்டிங் இலச்சினை வைக்க பயன்படுத்தும். அமைச்சர்கள் காரில் தமிழ்நாடு இலச்சினை இருக்கும். இதனால் அவர் விரைவில் அமைச்சராகிறாரோ என்ற கேள்வி அப்போதே எழுந்தது.

சர்ச்சை

சர்ச்சை

இந்த நிலையில்தான் சமீபத்தில் சர்ச்சை ஒன்றில் சிக்கிய அமைச்சருக்கு பதிலாக அந்த பதவியில் உதயநிதி அமர வைக்கப்படலாம் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அமைச்சர் பொறுப்பு உங்களுக்கு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களை பார்த்து உங்கள் கருத்து என்ன என்று கேட்டார். அதற்கு சிலர்.. அமைச்சர் ஆகுங்கள் என்று பதில் அளிக்க... சரி போய் தலைவரிடம் சொல்கிறேன் என்று கூறினார். இந்த நிலையில்தான் அவருக்கு விரைவில் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+