திமுக என்றுமே தமிழ், தமிழன், தமிழகத்தின் எதிரி தான்... ஹெச்.ராஜா ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக என்றுமே தமிழ், தமிழன், தமிழகத்தின் எதிரி தான் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

பருவமழை பொய்த்து போனதால், நீர் நிலைகள் வறண்டு போயின. தலைநகர் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு, மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்தநிலையில், சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை போக்க ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வர ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

DMK is always an enemy of Tamil, Tamilans and Tamil Nadu Says H.Raja

இந்நிலையில், ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் சென்னைக்கு நீர் கொண்டு போனால் பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என திமுக பொருளாளர் துரைமுருகன், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தமிழக மக்கள் தண்ணீர் கேட்டு, ஆள்பவர்களிடம் முறையிடுகின்றனர். ஆள்பவர்களோ ஆண்டவரிடம் முறையிடுகிறார்கள் என்று கூறினார்.

நிர்வாகம் நடத்த முடியாவிட்டால், அரசு வெளியேற வேண்டும். இல்லையெனில் மக்கள் வெளியேற்றுவார்கள். வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் தண்ணீர் பிரச்சினை தான் முதன்மையாக இருக்கும் என்றும் தெரிவித்தார். இதற்கு, ஆளும்கட்சியினர் மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துகளை கூறிவருகின்றனர்.

அந்தவகையில், சமூக வலைதளத்தில் ஹெச். ராஜா வெளியிட்டுள்ள பதிவில், வேலூரிலிருந்து சென்னையில் பரிதவிக்கும் மக்களுக்கு தண்ணீர் எடுத்துச்சென்றால் போராட்டம் நடத்துவோம் என்று துரைமுருகன் மிரட்டல். திமுக என்றுமே தமிழ், தமிழன், தமிழகத்தின் எதிரிதான் என்று மீண்டும் நிரூபணம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், துரைமுருகன் எனக்கு நண்பர், ஆனால் மனிதாபிமானம் இன்றி கொடூரமாக இருப்பார் என எதிர்பார்க்கவில்லை என்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் விமர்சனம் செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+