CMC சர்கார்.. குடும்ப ஆட்சி.. கலாச்சார எதிர்ப்பு.. திமுக மீது அடுக்கடுக்காக விமர்சனம் வைத்த மோடி!
சென்னை: மதுராந்தகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைமையிலான அரசு மீது சரமாரியாக குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். திமுக நடத்துவது கரப்ஷன், மாஃபியா,கிரிமினல் ஆதரவு அரசு இது (சிஎம்சி ஆட்சி) என்று விமர்சித்திருக்கிறார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், என்டிஏ கூட்டணியை பாஜக இறுதி செய்து வருகிறது. சமீபத்தில் கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்த நிலையில், இன்று மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் மோடி பேசியது கவனம் பெற்று வருகிறது.

மோடி என்ன பேசினார்?
"இந்த ஆண்டின் தமிழகத்துக்கான முதல் பயணம் இது. பொங்கலுக்கு பிறகு தமிழகம் சிறப்பாக இருக்கிறது. இந்த நேரத்தில், ராமரை போற்றி வணங்குகிறேன். அனைவரின் நலன், தமிழ்நாட்டின் நலனுக்காக நான் வேண்டிக் கொள்கிறேன். சில நாட்களுக்கு முன்பு எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை கொண்டாடினோம். இன்று, சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளும் கூட.. அவருக்கு எனது அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.
ஊழலற்ற மாநிலம்
இந்த மேடையை பாருங்கள்.. தமிழ்நாட்டின் எதிர்காலத்தில் நிர்ணயிக்க இந்த தலைவர்கள் இங்கு கூடியிருக்கிறார்கள். திமுக அரசிடமிருந்து தமிழ்நாட்டை விடுவிக்க வேண்டும் என்பதே இந்த தலைவர்களின் நிலைப்பாடு. தமிழ்நாட்டை ஊழல் அற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். இப்போது திமுகவின் முடிவுக்கான கவுண்டன் தொடங்கிவிட்டது.
2 முறை வாய்ப்பு
நீங்கள் திமுகவுக்கு 2 முறை வாய்ப்பளித்தீர்கள். ஆனால், அவர்கள் தமிழக மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்து விட்டார்கள். திமுக வாக்குறுதிகளை அள்ளி தெளித்தது. ஆனால், அந்த வாக்குகளை பூஜியம் அளவில் தான் நிறைவேற்றியது. திமுக ஆட்சியை சிஎம்சி ஆட்சி என்று கூறுகிறார்கள். அதாவது ஊழல், குற்றவாளி குழுக்கள், குற்றங்கள் ஆகியவற்றை ஆதரிக்கும் அரசாக இந்த அரசு இருக்கிறது.
குடும்ப ஆட்சி
தமிழ்நாட்டில் திமுகவை வேரோடு கிள்ளி எறிய வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள். இங்கு இரட்டை எஞ்சின் அரசாங்கம் அமைவது உறுதியாகிவிட்டது. திமுக ஆட்சியில், தமிழ்நாட்டில் ஜனநாயகம் இல்லை. ஒரே ஒரு குடும்பத்திற்காக மட்டுமே இங்கே ஆட்சி இங்கே கொண்டிருக்கிறது" என்று விமர்சித்திருக்கிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications