கடைசி நேரத்தில் வந்து சேர்ந்த "கதிரவன்.." 186 தொகுதிகளில் களம் காணப்போகும் உதய சூரியன் "சின்னம்"
சென்னை: திமுக 173 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில், உதய சூரியன் சின்னம் 186 தொகுதிகளில் களம் காண உள்ளது.
திமுக கூட்டணியில்,காங்கிரஸ் - 25 இடங்கள், விசிக - 6, மதிமுக - 6, இந்திய கம்யூனிஸ்ட் - 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 6, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3, கொங்கு மக்கள் தேசிய கட்சி- 3, மனிதநேய மக்கள் கட்சி - 2, தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித் தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடம் பெற்றுள்ளன.
Recommended Video
எனவே திமுக 174 தொகுதிகளில் போட்டியிடும் நிலைமை உருவாகியது. இதில் மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றவை உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட உள்ளன.

உதித்த கதிரவன்
இப்போது, கதிரவன் தலைமையிலான, அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சி திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த கட்சி சிங்கம் சின்னத்தில் போட்டியிடுகிறது.எனவே, 174 ஆக இருந்த திமுக போட்டியிடும் தொகுதி என்பது 173 ஆக மாறி இருக்கிறது.

உதய சூரியன்
அதே போல உதயசூரியன் சின்னம் 187 தொகுதிகளில் களமிறங்குவதாக இருந்தது. இன்று மாறியுள்ளது. பார்வேர்ட் பிளாக் கட்சி காரணமாக, இந்த தொகுதி எண்ணிக்கை 186 ஆக குறைய வாய்ப்பு இருக்கின்றது.

பட்டியலுக்கு ஒப்புதல்
திமுக கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் அதாவது சிபிஎம், சிபிஐ, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கான தொகுதிகள் என்னென்ன என்பதற்கான பட்டியலுக்கு ஒப்புதல் வாங்கி விட்டதாக தகவல்கள் வருகின்றன. எனவே இன்று ஒருகட்ட வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இறுதி செய்யப்படாத ஒரு சூழலில் தாமதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் இழுபறி
பிற, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் தொகுதிகள் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி பேச்சு வார்த்தையின் போது எத்தனை தொகுதிகள் என்பது குறித்து நீண்ட இழுபறி நிலவியது காங்கிரசுடன்தான். இப்போது எந்தெந்த தொகுதிகள் என்பதிலும் அந்த கட்சிதான் இழுத்தடிக்கிறது.
-
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன?












Click it and Unblock the Notifications