தேமுதிக பிரேமலதா, ஓபிஎஸ், என எல்லாரையும் வண்டியில் ஏற்றும் திமுக.. பின்னால் உள்ள இரண்டு காரணங்கள்
சென்னை: தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில், தேமுதிக, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் அதிருப்தி தலைவர்கள் எனப் பலரையும் தன் பக்கம் இழுக்க அல்லது அரவணைத்துச் செல்ல திமுக ஆர்வம் காட்டி வருகிறது. ஆளும் கட்சியாக இருந்தும், இத்தனை சிறிய மற்றும் பிளவுபட்ட அணிகளை திமுக தனது 'வண்டியில்' ஏற்றுவதன் பின்னணியில் இரண்டு மிக முக்கியமான காரணங்கள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
விஜய்யின் அரசியல் என்ட்ரி
விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்து திமுக மேலிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறதாம். கடந்த 2006ல் விஜயகாந்த் ஏற்படுத்திய பாதிப்பு, 2016ல் விஜயகாந்த் ஏற்படுத்திய பாதிப்பு திமுகவிற்கு அதிகம். அதுபோன்ற சூழல் வரக்கூடாது என்று திமுக நினைகிறதாம். விஜய் குறிவைப்பது குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களை. இந்த வாக்குகள் பொதுவாக திமுக அல்லது அதிமுகவிற்குச் செல்ல வேண்டியவை ஆகும்.

மாற்று சக்தி பிம்பம்
திமுகவிற்கு எதிரான வாக்குகளை விஜய் ஒருவேளை மொத்தமாக ஈர்த்தால், அது ஆளும் கட்சிக்குப் பெரும் நெருக்கடியைத் தரும். இதைச் சமாளிக்கவே, சிதறிக் கிடக்கும் சிறிய வாக்கு வங்கிகளைக் கொண்ட தேமுதிக போன்ற கட்சிகளையும், அதிமுகவின் அதிருப்தி முகங்களையும் (ஓபிஎஸ் உட்பட) திமுக தனது குடைக்குள் கொண்டு வர திமுக நினைக்கிறதாம். இதன் மூலம் "எதிர்ப்பு வாக்குகள்" விஜய்க்குச் செல்லாமல் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளப்படுவதை திமுக உறுதி செய்கிறது என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்
விஜய் பாஜக கூட்டணி
அதேபோல் கடைசி நேரத்தில் விஜய் திடீரென அதிமுக பாஜக கூட்டணியில் பங்கேற்கும் முடிவினை எடுத்தால், அதுவும் திமுகவிற்கு பாதகமாகும் என்பதால் திமுகவின் சாதூர்யமான அரசியல் நகர்வாக பார்க்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
'மிஷன் 200' - இமாலய வெற்றி இலக்கு
முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே பொதுக்கூட்டங்களில் முழங்கியது போல, இந்த முறை திமுகவின் இலக்கு வெறும் வெற்றி மட்டுமல்ல; அது 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றும் ஒரு வரலாற்றுச் சாதனையாக செய்ய விரும்புகிறாராம். அதிமுக ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு பக்கம் இயங்கினாலும், ஓபிஎஸ் மற்றும் இதர அதிருப்தி தலைவர்களைத் தன் பக்கம் ஈர்ப்பதன் மூலம், அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரும் ஓட்டையை ஏற்படுத்த திமுக திட்டமிடுகிறதாம். தனித்து நின்று 200 இடங்களை வெல்வது சவாலானது என்பதை உணர்ந்தே, சிறிய கட்சிகளையும் இணைத்துக்கொண்டு ஒரு 'தோற்கடிக்க முடியாத மெகா கூட்டணியை' உருவாக்கி, எதிர்க்கட்சிகளுக்கு டெபாசிட் கூட கிடைக்காமல் செய்ய வேண்டும் என்பதே திமுகவின் ஸ்கெட்ச் ஆக பார்க்கப்படுகிறது
அரசியல் சதுரங்கம்
விஜய் எனும் புதிய சக்தியை எதிர்கொள்ள பழைய ஆளுமைகளையும், அனுபவமிக்க அதிருப்தியாளர்களையும் தன் பக்கம் இழுப்பது திமுகவிற்கு ஒரு தற்காப்பு அரணாகவும், அதே சமயம் ஒரு ஆக்ரோஷமான தாக்குதல் வியூகமாகவும் அமைந்துள்ளது என்று அரசியல் நிபுணர்கள் கணிக்கிறார்கள். இறுதியாக சொல்வது என்றால். விஜய் தரும் நெருக்கடியை வாய்ப்பாக மாற்றி, அதிமுகவை அடியோடு பலவீனப்படுத்தி, தமிழகத்தில் ஒரு "ஒற்றைத் தலைமை" கட்சியாக உருவெடுக்கவே திமுக இந்தத் தேர்தலை பயன்படுத்துகிறது என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
-
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!












Click it and Unblock the Notifications