போங்க.. எல்லாமே எங்க தப்புதான்.. கொதித்தெழுந்த ஸ்டாலின்.. மிரண்டு போன காங்.. கடும் பதற்றத்தில் திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் கட்சிக்குள் நிலவி வரும் கோஷ்டி மோதல் தேர்தல் நேரத்தில் சமூக வலைத்தளம் முழுக்க வெளிப்படையாக தெரிய தொடங்கி உள்ளது. கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சியில் நடக்கும் விஷயங்கள் எதையும் கூட்டணியில் இருக்கும் திமுக கொஞ்சம் கூட விரும்பவில்லையாம்.. திமுக தலைவர் ஸ்டாலினே இதை பற்றி விசாரித்துள்ளார்.. அப்படி என்ன நடந்தது?

காங்கிரஸ் கட்சி என்றாலே கோஷ்டி மோதல் என்பது அரசியல் வட்டாரத்தில் பல காலமாக பேச்சாக இருக்கிறது. அதிலும் தமிழக காங்கிரஸில் இவருக்கு கீழ் ஒரு அணி, அவருக்கு கீழ் ஒரு அணி என்று பல அணிகள் பிரிந்து கிடக்கின்றன.

தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் யாரும் சரியாக வேலை பார்க்காமல் இப்படி கோஷ்டி மோதலில் ஈடுபடுவதுதான் அந்த கட்சியின் தோல்விக்கும் முக்கியமான காரணமாக இருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்.. காங்கிரசில் கோஷ்டி மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

காங்கிரசில் வெற்றி வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது, வாரிசுகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது, வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக நடக்கவில்லை என்பது ஒரு பக்கம் குற்றச்சாட்டாக உள்ளது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் தரப்பு தேர்வு செய்யும் வேட்பாளர்களை ஆதரிக்க யாரும் இல்லை. தேர்தல் பணிகளை செய்ய கூட யாரும் இல்லை என்று ஒரு தரப்பு கூறுகிறது.

மோசம்

மோசம்

இதெல்லாம் போக டெல்லி தலைமைக்கு தெரியாமலே வேட்பாளர்களை தேர்வு செய்கிறார்கள். காசு கொடுத்து சீட் வாங்குகிறார்கள். ஏகப்பட்ட முறைகேடு நடக்கிறது என்று இன்னோரு தரப்பு கூறுகிறது. மொத்தத்தில் இடியாப்ப சிக்கல் போல காங்கிரசுக்கும் பல அணிகள் பிரிந்து.. யார் யாருக்கு எதிரி என்று தெரியாத அளவிற்கு மோதிக்கொண்டு இருக்கிறார்கள்.

வெளிப்படை

வெளிப்படை

காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் முறைகேடு நடக்கிறது என்று எம்பி ஜோதி மணியே நேற்று வெளிப்படையாக அறிவித்துவிட்டார். இன்னொரு பக்கம் தேர்தல் பணிகளை செய்யவே ஆட்கள் இல்லை என்று எம்பி ப.சிதம்பரம் கூறி வருகிறார். அதோடு எம்பி விஷ்ணுபிரசாத் நேற்று வேட்பாளர் தேர்வை பொறுக்க முடியாமல் உண்ணாவிரதம் செய்யும் அளவிற்கு சென்றுவிட்டார்.

உண்ணாவிரதம்

உண்ணாவிரதம்

இன்னொறு பக்கம் காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா.. ஜோதிமணியை தாக்கும் வகையில் கடுமையாக இணையத்தில் பேசி இருக்கிறார். மூத்த தலைவர் மாணிக்கம் தாகூரும் இதேபோல் உட்கட்சி பூசல் குறித்து மனம் வெதும்பி இணையத்தில் புகார்களை அடுக்கி உள்ளார். மொத்தத்தில் காங்கிரஸ் பிரச்சனை அப்பட்டமாக வெளியே தெரிந்துவிட்டது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

இந்த பிரச்னைக்கு இடையில்தான் நேற்று காங்கிரஸ் சார்பாக 21 வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. நிறைய வாரிசுகளுக்கு வாய்ப்பு கொடுத்து.. 21 வேட்பாளர்களை காங்கிரஸ் முதல் கட்டமாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் இப்படி வேட்பாளர் பட்டியலை அறிவித்தாலும் திமுக தரப்பும், ஸ்டாலினும் காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருக்கிறார்களாம்...காங்கிரசுக்கு அதிக சீட் ஒதுக்கி இருக்க கூடாது என்று திமுக நினைக்க தொடங்கி உள்ளது.

திமுக

திமுக

இது குறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்த போது.. காங்கிரஸ் செய்வது ஏதும் சரியில்லை. வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்டது. இன்னும் இப்படி கோஷ்டி மோதல் செய்தால் என்ன அர்த்தம்.. இது திமுகவைதான் பாதிக்கும் . காங்கிரசில் தேர்தல் வேலையை கூட பார்க்க ஆட்கள் இல்லை . இப்படி இருக்கும் போது அவர்கள் எங்களிடம் 40 தொகுதிகளை கேட்டு தொல்லை செய்தனர்.

தொல்லை

தொல்லை

நாங்கள்தான் தவறு செய்துவிட்டோம். அவர்களுக்கு 25 இடங்கள் கொடுத்து இருக்க கூடாது. தேர்தலுக்கு ஒரு மாதம் கூட இல்லை.. இப்ப போய் வெளிப்படையா சண்டை போடுறாங்க.. இது எப்படிங்க நியாயம் ஆகும் என்று கோபத்துடன் உடன் பிறப்புகள் குமுறுகிறார்கள். இந்த காங்கிரஸ் மோதலால் ஸ்டாலினே ஒரு பக்கம் கோபத்தில் இருக்கிறாராம்.

 ஸ்டாலின்

ஸ்டாலின்

எந்த விதத்திலும் திமுக பின் தங்கிவிட கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அப்படி இருக்கும் போது காங்கிரஸ் இப்படி திடீரென பிரச்சனையில் சிக்கி இருப்பதை ஸ்டாலின் விரும்பில்லை.. ஏதாவது பண்ணுங்க.. சீக்கிரம் வேட்பாளரை அறிவிச்சு தேர்தல் வேலையை பாருங்க என்று காங்கிரஸ் தலைவர்களிடம் ஸ்டாலின் வெளிப்படியாகவே கூறி இருக்கிறாராம்.. காங்கிரசால் தேர்தலில் எதுவும் சொதப்பிவிட கூடாது என்ற பதற்றத்தில் தற்போது திமுக இருக்கிறதாம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+