2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப்
சென்னை: தமிழக அரசியல் களம் தற்போது அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. சட்டமன்றத் தேர்தலை நோக்கி ஒட்டுமொத்த மாநிலமும் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், நிஜக் களத்திற்கு இணையாக 'டிஜிட்டல்' களத்திலும் கணிப்புகள் களைகட்டத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக, கிரிப்டோகரன்சி அடிப்படையிலான சர்வதேச கணிப்புத் தளமான 'பாலிமார்க்கெட்' (Polymarket) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள், அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அது என்ன பாலி மார்க்கெட்?
பாலி மார்க்கெட் (Polymarket) என்பது பிளாக்செயின் (Blockchain) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் உலகின் மிகப்பெரிய 'கணிப்புச் சந்தை' (Prediction Market) தளமாகும். இது ஒரு சாதாரண பெட்டிங் தளம் கிடையாது; மாறாக, நிஜ உலகில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், விளையாட்டுப் போட்டிகள், பொருளாதார நகர்வுகள் மற்றும் சர்வதேச நிகழ்வுகளின் முடிவுகளை மக்கள் தங்கள் அறிவாற்றலைக் கொண்டு கணித்து, அதன் மேல் முதலீடு செய்யும் ஒரு வர்த்தகத் தளமாகும். இங்கு ஒவ்வொரு நிகழ்வும் ஒரு 'ஆம்' (Yes) அல்லது 'இல்லை' (No) என்ற ஒப்பந்தமாக (Contract) மாற்றப்படும்.
ஒரு நிகழ்வு நடப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தால், அந்த ஒப்பந்தத்தின் விலை 100 காசுகளை (Cents) நோக்கி உயரும்; வாய்ப்பு குறைவாக இருந்தால் விலை குறையும். இந்த விலையேற்றமே அந்த நிகழ்வு நடப்பதற்கான 'மக்களின் கணிப்பு சதவீதம்' (Implied Probability) என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, தமிழகத் தேர்தலில் ஒரு கட்சி வெற்றி பெறும் என 80 காசுகள் விலை இருந்தால், அந்த கட்சி வெற்றி பெற 80% வாய்ப்பு இருப்பதாகச் சந்தை கருதுகிறது என்று அர்த்தம். துல்லியமான தரவுகள் மற்றும் மக்களின் ஒட்டுமொத்த கருத்துக்களை (Wisdom of the Crowd) பிரதிபலிப்பதால், செய்தி ஊடகங்களை விடவும் இந்தத் தளம் பல நேரங்களில் துல்லியமான கணிப்புகளை வழங்குவதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இது கிரிப்டோகரன்சி மூலம் இயங்குவதாலும், சூதாட்டத் தன்மையைக் கொண்டிருப்பதாலும் பல்வேறு நாடுகளில் சட்டரீதியான விவாதங்களுக்கும் உள்ளாகி வருகிறது.

டிஜிட்டல் திண்ணையில் தி.மு.க-வின் 'டாப்' கியர்!
பாலிமார்க்கெட் என்பது வெறும் கருத்துக்கணிப்பு தளம் மட்டுமல்ல; இது பணத்தைப் பணயமாக வைத்து மக்கள் ஒரு நிகழ்வின் வெற்றியைத் தீர்மானிக்கும் வர்த்தகத் தளம். இதன் தற்போதைய நிலவரப்படி, ஆளும் கட்சியான தி.மு.க அசுர வேகத்தில் முன்னேறி வருவது தெரிகிறது.
யார் கையில் எத்தனை 'பர்சண்டேஜ்'?
தி.மு.க: 78% வெற்றி வாய்ப்பு (சுமார் 45% அதிரடி உயர்வு)
அ.தி.மு.க: 18% வெற்றி வாய்ப்பு (25% சரிவு)
த.வெ.க: 5% வெற்றி வாய்ப்பு (16% சரிவு)
ஏனைய கட்சிகள்: 1% க்கும் குறைவான வாய்ப்பு
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தி.மு.க-வின் வெற்றிக்கு 'எஸ்' (Yes) என்று பந்தயம் கட்டுபவர்களின் எண்ணிக்கை எகிறிக்கொண்டே போகிறது. ஒரு பங்கின் விலை 81 காசுகளாக வர்த்தகமாவது, மக்கள் மத்தியில் தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பு 81% உறுதி என்று டிஜிட்டல் உலகம் நம்புவதைக் காட்டுகிறது.
பிப்ரவரி 'யூ-டர்ன்': மாறிய காற்று!
ஜனவரி முதல் மார்ச் வரையிலான தரவுகளை உற்று நோக்கினால் ஒரு சுவாரஸ்யமான மாற்றம் தெரிகிறது. ஆரம்பத்தில் அ.தி.மு.க மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஆகியவற்றுக்குச் சாதகமாகச் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தன. ஆனால், பிப்ரவரி மாத இறுதியில் நிலைமை தலைகீழாக மாறியது.
தி.மு.க-வின் கிராஃப் ராக்கெட் வேகத்தில் உயரத் தொடங்கியது, மற்ற கட்சிகளின் பங்குகள் சரிவைச் சந்திக்கத் தொடங்கின. இந்தத் திடீர் எழுச்சி, தற்போதைய ஆளும் தரப்பிற்கு டிஜிட்டல் வர்த்தகர்கள் மத்தியில் இருக்கும் பலமான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இதுவே முடிவா?
"ஆன்லைன் கணிப்புகள் என்பது மக்களின் தற்போதைய மனநிலையைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி மட்டுமே; அதுவே இறுதித் தீர்ப்பல்ல" என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தேர்தல் நெருங்கும் வேளையில் அமையப்போகும் கூட்டணிகள், கடைசி நேரப் பிரச்சாரங்கள் மற்றும் மக்களின் நேரடி வாக்குகள் எனப் பல காரணிகள் முடிவுகளை மாற்றியமைக்கலாம்.
இருப்பினும், இப்போதைக்கு 'பாலிமார்க்கெட்' திண்ணையில் தி.மு.க-வே 'நம்பர் 1' இடத்தில் கெத்தாக அமர்ந்துள்ளது. டிஜிட்டல் கணிப்பு நிஜமாகுமா அல்லது கடைசி நேரத்தில் ட்விஸ்ட் காத்திருக்கிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு -
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்? இதுதான் காரணம் - எடப்பாடி சொன்ன சீக்ரெட்! -
விஜய் உடன் மல்லுக்கட்டும் இனிகோ இருதயராஜ்.. திருச்சி கிழக்கு திமுக வேட்பாளரின் பலம், பலவீனம் என்ன? -
“எடப்பாடி பழனிசாமி ஒரு மனநல மருத்துவரை பார்த்து பரிசோதிப்பது நல்லது”.. திமுக பெண் தலைவர்கள் தாக்கு -
12 நாட்களே மிச்சம்! ராகுல் காந்தி தமிழகத்தை புறக்கணிக்க காரணம் இதுதானா? -
எடப்பாடி பழனிசாமிக்கு கொலைவெறி அடங்கவில்லை.. 1979ல் நடந்த சம்பவம்.. ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்! -
“எனக்கும் சிற்றரசுவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு”.. அண்ணா நகரில் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின்! -
திருமா பெயரை சொன்ன போது.. அப்படியே அமர்ந்திருந்த பிரேமலதா? உண்மையில் என்ன கோபம்? கசிந்த தகவல் -
கோவை தெற்கில் படையெடுக்கும் கரூர் டீம்.. திணறடிக்கும் செந்தில் பாலாஜி.. அலறும் அதிமுக -
புதுச்சேரியில் புது ரெக்கார்டு! வரலாறு படைத்த வாக்காளர்கள்.. வாக்கு சதவிகித்தை பாருங்க!












Click it and Unblock the Notifications