கவலையே வேணாம்.. பட்டை தீட்டப்பட்ட திமுககாரன்.. ஹிண்ட் தந்த டிஆர்பி ராஜா.. வரப்போகும் மாற்றம்!?
சென்னை: திமுக ஐடி விங்கின் மாநில செயலாளராக மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக ஐடி விங் மீது அக்கட்சியினர் சிலரே கடந்த சில மாதங்களாக விமர்சனங்கள் வைத்த நிலையில் இவரின் பதவி ஏற்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழ்நாடு நிதி அமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுகவில் ஐடி பிரிவு செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் அவரின் பணிச்சுமை கருதி தற்போது மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜாவிற்கு இந்த பதவி அளிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சராக அரசுப் பணிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதால் கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கட்சி பொறுப்பில் இருந்து விலகி உள்ளார்.

என்ன நடந்தது?
திமுக ஆளும் கட்சியாக இருந்தாலும் அக்கட்சியின் ஐடி விங் அவ்வளவு வலுவாக இல்லை என்ற புகார்கள் உள்ளன. அதாவது கட்சி ஆதரவாளர்கள் இணையத்தில் களமாடுகிறார்கள். திமுக அனுதாபிகள் , தொண்டர்கள் இணையத்தில் களமாடுகிறார்கள். ஆனால் ஐடி விங் சார்பாக உள்ளவர்கள் சரியாக டிரெண்டுகளை செய்வது இல்லை. ஐடி விங் கொஞ்சம் மெதுவாக இருக்கிறது என்ற புகார் திமுக ஐடி விங் மீது அக்கட்சியின் நிர்வாகிகள் சிலருக்கு இருந்தது.

இணையத்தில் சிலர் போஸ்ட்
திமுகவை சேர்ந்த பிரபல நிர்வாகிகளே கூட இதை இணையத்தில் வெளிப்படுத்தி இருந்தனர். திமுக ஐடி விங் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து வந்தனர். இப்படிப்பட்ட நேரத்தில்தான் திமுகவின் ஐடி விங் மாநில செயலாளராக டிஆர்பி ராஜா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இணையத்தில் ஏற்கனவே ஆக்டிவாக இருக்க கூடியவர் டிஆர்பி. அதிலும் சமூக வலைத்தளங்களில் திமுகவிற்கு எதிரான கருத்துக்களுக்கு காமெடியாக பதில் அளித்து டிரெண்ட் செய்யும் "ஹியூமர்" செய்ய கூடியவர்.

எதிர்பார்ப்பு
இந்த நிலையில்தான் டிஆர்பி ராஜாவின் நியமனம் கட்சியினர் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே திமுக தனது ஐடிவிங்கை வலுப்படுத்த போவதாக செய்திகள் வந்தன. வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இப்போதே திமுக ஐடி விங்கை பலப்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து டிஆர்பி ராஜா வாழ்த்தும் பெற்றுள்ளார். ஐடி விங்கில் இளம் ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்று திமுக இந்த முடிவை எடுத்து இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில் திமுக ஐடி விங்கில் விரைவில் புதுமுயற்சிகள் செய்யப்படும் என்று டிஆர்பி கூறியுள்ளார். அவர் செய்துள்ள ட்விட்டில், அன்பார்ந்த உடன்பிறப்புகள் அனைவருக்கும் வணக்கம். கழகத் தலைவர் அளித்திருக்கும் பொறுப்பை நீங்கள் அனைவரும் எதிர்பார்க்கும் அளவிற்கு செயலாற்றிக் காட்டவேண்டும் என்பதே எனது நோக்கம். தற்போது நம்மிடம் இருக்கும் கட்டமைப்பை முழுமையாக அறிந்துகொண்டு விரைவில் புதிய முயற்சிகள் துவங்கும். கடந்த சில தினங்களாக பலர் உங்களது ஆலோசனைகளை அளித்துள்ளீர்கள்

ஐடி விங்கில் மாற்றம்
. தங்களது நம்பிக்கைக்கு நன்றி. கவலை வேண்டாம்,தங்களோடு இணையத்தில் களம் கண்டவன் என்ற முறையில் தங்களுக்கு இருக்கும் அனைத்து "உணர்வுகளும்" எனக்கும் உண்டு. பொறுத்திருங்கள்.. முன்னாள் முதல்வர் கருணாநிதி கல்லூரியில் பட்டை தீட்டப்பட்ட திமுக காரன், என்று டிஆர்பி ராஜா குறிப்பிட்டுள்ளார். இணையத்தில் இருந்தவன் என்ற முறையில் உங்களுக்கான உணர்வு எனக்கும் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இணையத்தில் திமுக ஐடி விங் பற்றி சிலர் விமர்சனம் கூறி வந்த நிலையில்.. அவரின் இந்த ட்விட் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஐடி விங்கில் அவர் செய்ய போகும் மாற்றங்களுக்கு ஹிண்டாக பார்க்கப்படுகிறது.
-
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
கோவையின் அஸ்திவாரத்திலேயே கை வைத்த செந்தில் பாலாஜி.. மொத்தமாக மாறும் களம் -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்? இதுதான் காரணம் - எடப்பாடி சொன்ன சீக்ரெட்! -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு -
கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்.. திமுக யாரிடம் செல்லும் என்றே தெரியாது.. அண்ணாமலை பரபர பேச்சு -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
பிராமண எதிர்ப்பு காலாவதியாகிவிட்டதா? - தவெக பொருளாளர் சொல்வது சரியா? -
2021 Vs 2026... காலம் மாறிபோச்சு... எய்ம்ஸ் பற்றி பேசாத திமுக..! ‘நீட்’ பற்றி பேசும் அதிமுக! -
சென்னையில் எந்தெந்த சமூகத்தினருக்கு எம்.எல்.ஏ சீட்? திமுக பிரதிநிதித்துவ ஃபார்முலா!












Click it and Unblock the Notifications