முதல்வரின் 70வது பிறந்தநாள்.. ஸ்டாலினுடன் செல்பி எடுக்க ஆசையா? வாழ்த்து சொல்லணுமா? பிரத்யேக ஏற்பாடு
முதல்வர் ல்டாலினின் 70 ஆவது பிறந்தநாளையொட்டி அவருடன் செல்பி எடுக்க பிரத்யேக ஏற்பாடு.
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாளையொட்டி அவருடன் செல்பி எடுக்கவும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செய்து வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மார்ச் 1 ஆம் தேதி 70 ஆவது பிறந்தநாள். தனது பிறந்தநாளுக்கு மாலைகள், பூச்செண்டுகளை அனுப்புவதை காட்டிலும் எளிமையானவர்கள் பயன்பெறும் நோக்கில் நலத்திட்டங்களை செய்தால் மகிழ்வேன் என முதல்வர் நேற்றைய தினமே உடன்பிறப்புகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற இந்த 21 மாதங்களில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம், ஆவின் பால் கட்டணம் குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, குழந்தைகளுக்கு தொலைநோக்கு கல்வித் திட்டங்கள், மக்களை தேடி மருத்துவம், வீடு தேடி கல்வி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு
இந்த திட்டங்களை நினைவுக்கூரும் வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இரு புதுமையான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி கட்சித் தொண்டர்கள் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் முதல்வரின் நலவிரும்பிகள் அனைவரும் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கலாம். ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று இது இரண்டாவது பிறந்தநாள்.

தமிழக அரசின் திட்டங்கள்
திமுக அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலம் திமுகவின் ஐடி விங் சிறப்பு ஏற்பாடுகளுக்கு திட்டமிட்டுள்ளது. அவ்வாறு அவர்கள் செய்த இரு திட்டங்களில் ஒன்று முதல்வர் ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து சொல்ல சிறப்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 07127191333 என்ற எண்ணிற்கு அழைப்பு விடுக்கலாம். அதில் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்தை பதிவு செய்யலாம்.

மார்ச் 2
இந்த எண் இன்று முதல் மார்ச் 2 ஆம்தேதி வரை செயல்படும். இதன் மூலம் கோடானு கோடி மக்கள், தொண்டர்கள், நலம்விரும்பிகள் முதல்வருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவிக்க முடியும். அது போல் செல்பி வித் சிஎம் எனும் புதிய திட்டத்தையும் அவர்கள் தொடங்கியுள்ளார்கள். www.selfiewithCM.com என்ற இணையதளத்திற்கு உள்ளே சென்று கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும்.

மெய்நிகர்
அப்போது மெய்நிகர் எனப்படும் விர்சுவல் (virtual) தொழில்நுட்பம் மூலமாக முதல்வருடன் செல்பி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் போதும் தேர்தல் பிரச்சாரங்களின்போது அவருடன் செல்பி எடுப்பதில் மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

செல்பி வித் சிஎம்
இதனால் இந்த மெய்நிகர் செல்பி மூலம் லட்சக்கணக்கானோர் முதல்வருடன் செல்பி எடுப்பார்கள் என தெரிகிறது. முதல்வர் ஸ்டாலின் இதுவரை கட்சி ரீதியிலும் ஆட்சி ரீதியிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். சென்னையின் மேயர் முதல் முதல்வர் வரை அவர் வகித்த பொறுப்புகளும் அதற்காக அவர் போட்ட உழைப்புகளும் ஏராளம் என திமுக தொண்டர்கள் பூரிக்கிறார்கள்.

முக்கிய திட்டங்கள்
அவரால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை நினைவுக்கூர்ந்து பலர் போஸ்டர் அடித்து தங்கள் வாழ்த்துகளை கூற முற்பட்டுள்ளார்கள். மேலும் திமுகவின் மூத்த நிர்வாகிகள் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை சொல்ல செல்வார்கள். அது போல் ஸ்டாலினும் தனது பிறந்தநாளின் போது மெரினாவில் உள்ள தனது தந்தை கருணாநிதியின் சமாதியில் ஆசி பெறுவார். மேலும் கோபாலபுரத்தில் உள்ள தனது தாய் தயாளு அம்மாளிடமும் ஆசி பெறுவது வழக்கம்.
-
வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி! -
நள்ளிரவில் ‘செக்’ வைக்கும் காக்கிகள்.. சென்னையில் இரவு நேரத்தில் வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தவாக.. கூடுதல் சீட் தராததால் வேல்முருகன் அதிரடி முடிவு! -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
தமிழகம் + புதுச்சேரி.. 10 தொகுதிகள் ஒதுக்குங்க.. ஸ்டாலினை வீட்டில் சந்தித்து திருமாவளவன் கோரிக்கை! -
புதிய கட்சிகள் வரவால் திமுகவுக்கு நெருக்கடி.. 165-க்கும் குறைவான தொகுதியில்தான் இந்த முறை போட்டியா? -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி! -
கொங்கு வேட்பாளர்களுக்கு இன்று திமுக நேர்காணல்.. கோவையின் 10 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு? -
கொங்கில் கூட்டணிக்கு நோ சீட்.. ஸ்டாலினிடம் விடாப்படியா நின்ற தலைகள்! நேர்காணலில் நடந்த திடுக் விவாதம்












Click it and Unblock the Notifications