"லேட்டஸ்ட்" மகேந்திரன்.. செம பூரிப்பு.. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ட்வீட்.. என்ன காரணம்?
மகேந்திரன் இல்ல திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்
சென்னை: மேயர் பதவி ஒருவேளை இவருக்கு கிடைத்துவிடுமோ? என்ற அளவுக்கு பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கிய கோவை மகேந்திரன்.. இன்று முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஒரு ட்வீட் போட்டுள்ளர்.. என்ன காரணம்?
கோவை மகேந்திரன்.. இவர் ஒரு முக்கிய தொழிலதிபர்.. மகேந்திரனுக்கென தனிப்பட்ட செல்வாக்கு படைத்த "பசையுள்ள" கூட்டம் ஒன்று கொங்குவில் இருக்கத்தான் செய்கிறது.
நடந்து முடிந்த எம்பி மற்றும் சட்டசபை தேர்தல்களில் கொங்குவில் மநீம பெற்ற வாக்குகளில் பிரதான பங்கு மகேந்திரனுக்கும் உண்டு என்பதை மறுக்க முடியாது.

அதிருப்தி
இதனிடையே கமலிடம் அதிருப்தி ஏற்படவும், கட்சியை விட்டு வெளியேறினார்.. ஆனால் அடுத்த நாளே மகேந்திரனுக்கான டிமாண்ட் கூடியது. முதலில் அவருக்கு துண்டு விரித்து, சிக்னல் தந்தது திமுக மேலிடம்.. இதற்கு காரணம், கொங்குவில் பல காலமாகவே திமுகவின் பலம் எடுபடாமலேயே உள்ளதால், மகேந்திரனை கொண்டு கட்சியின் செல்வாக்கை உயர்த்த திட்டமிட்டதாக தெரிகிறது.

புதிய பொறுப்பு
எதிர்பார்த்தபடியே திமுகவில் இணைந்தார் மகேந்திரன்.. அதுவும் அவரது ஆதரவாளர்கள் 78 பேருடன் அழைத்து கொண்டு, அறிவாலயத்தில் மகேந்திரன் நுழையும்போதே பெருத்த எதிர்பார்ப்பு அன்று எழுந்தது.. போதாக்குறைக்கு 11 ஆயிரத்திற்கும் அதிகமான தொண்டர்கள் திமுகவில் இணைய உள்ளதாக சொல்லி, அந்த லிஸ்ட்டை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தபோது, இந்த எதிர்பார்ப்பு மேலும் எகிறியது. இதனால் திமுக மேலிடமே திக்குமுக்காடி போய்விட்டது.

இணைந்தனர்
"லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக திமுகவுக்கு வந்துள்ளனர். தேர்தலுக்கு முன்பே வந்து இருந்தால் இன்னும் அதிக இடங்களில் வென்று இருக்கலாம். இவர்கள் முன்பே கட்சியில் இணைந்து இருந்தால் கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களை வென்று இருப்போம்" என்று அந்த நேரத்தில் ஸ்டாலின் பேசிய பேச்சு மிகுந்த கவனத்தையும் பெற்றிருந்தது. மற்றொரு பக்கம் களப்பணியாற்றிய சிலருக்கும், ஸ்டாலினின் இந்த பேச்சு வருத்தத்தை தந்ததாகவும் முணுமுணுக்கப்பட்டது.

மகேந்திரன்
எனினும் மகேந்திரனுக்கு எந்த மாதிரியான பொறுப்பு தரப்படும்? கொங்குவில் ஏற்கனவே சில திமுக சீனியர்கள் இருந்தாலும், மகேந்திரனுக்கான பொறுப்பு கட்சியின் வளர்ச்சிக்கு மேலும் உதவுமா? சரிந்து போன செல்வாக்கை, கொங்குவில் தூக்கி நிறுத்த மகேந்திரன் எந்த அளவுக்கு பங்களிப்பை தருவார் என்ற எதிர்பார்ப்புகளும் கூடிக் கொண்டே வருகின்றன.

கலக்கம்
இப்படிப்பட்ட சூழலில்தான், மகேந்திரன் மேயர் பதவியை கேட்பதாகவும், மற்றொரு பக்கம் கொங்குவை முன்னிறுத்தி கட்சியிலேயே முக்கிய பொறுப்பு மகேந்திரனுக்கு வழங்கப்படலாம் என்றும் இருவேறு தகவல்கள் கசிந்தன.. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும், கோவை திமுக பிரமுகர்களுக்கு ஒருவித கலக்கத்தையே உண்டு பண்ணியது. இறுதியில், திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக மகேந்திரன் நியமனம் செய்யப்பட்டார்.

மகேந்திரன்
கோவை மேயருக்கான பதவியும் மகேந்திரனுக்கு கிடைக்குமா என்பது தெரியவில்லை.. ஆனால், மகேந்திரன் மீதான நம்பிக்கை முதல்வர் ஸ்டாலினுக்கு எப்போதுமே அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான், மகேந்திரன் வீட்டு சுபகாரியத்தில் முக ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். தென்சென்னை எம்பி தமிழச்சி - சந்திரசேகர் அவர்களின் மகள் டாக்டர் நித்திலாவுக்கும், மகேந்திரனின் மகன் டாக்டர் கீர்த்தனுக்கும் இன்று திருமண உறுதி விழா நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், எம்எல்ஏ உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நன்றிகள்
இதனால் மகேந்திரன் நெகிழ்ந்து போயுள்ளார்.. இதுகுறித்து ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்.. அதில், "எத்தனை நன்றிகள் சொன்னாலும் தீராது.. எங்கள் அழைப்பை ஏற்று குடும்பத்தினருடன் மண உறுதி ஏற்பு விழாவிற்கு நேரில் வருகை தந்து மனமார வாழ்த்துகளை வழங்கிய தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளும் தீரா அன்பும்" என்று தெரிவித்துள்ளார்.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications