கையில் சிகரெட்..வாயில் புகை! பாஜக ரஞ்சனாவா இது? மாணவர்களை தாக்கியவரின் வீடியோவை விட்ட திமுக ஐடி விங்
சென்னை: ஓடும் பேருந்தில் தொங்கிக்கொண்டு சென்ற மாணவர்களை தாக்கிய வழக்கில் கைதான பாஜகவை சேர்ந்த நடிகை ரஞ்சனா நாச்சியா, சிகரெட் புகைக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் திமுக ஐடி விங் மாநில துணை செயலாளர் இசை.
சென்னை குன்றத்தூர் - போரூர் செல்லும் அரசு பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டை தாண்டியும் தொங்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பேருந்தை வழிமறித்து நிறுத்திய பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு நிர்வாகி நடிகை ரஞ்சனா, பேருந்து ஓட்டுநரிடம் ஆவேசமாக தகாத முறையில் பேசினார். "இப்படி பேருந்தில் செல்பவர்களை செருப்பால் அடித்திருக்கலாமே! ஒருத்தன் மேலே ஏறுகிறான் பாருங்க." என்றார். அதன் பின்னர் பேருந்து பின் பக்க வாயிலுக்கு சென்ற அங்கு படியின் நின்றுகொண்டு இருந்த மாணவர்களையும் "கீழே இறங்குடா நாயே" என்று திட்டினார்.

கீழே இறங்க மறுத்த மாணவர்களை வெளியே தள்ளி அவர்களது தலை மற்றும் முகத்தில் பாஜக நிர்வாகி நடிகை ரஞ்சனா தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்து நடத்துநரையும் விடாத ரஞ்சனா நாச்சியா, "படியில் தொங்குவதை பார்த்துக்கொண்டு இருக்கிறியே.. அறிவு கெட்ட நாயே" என அவரிடமும் அத்துமீறி பேசினார். ரஞ்சனா இவ்வாறு நடந்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. பேருந்து படிகளில் தொங்கிக்கொண்டு செல்வது தவறு என்றாலும், அதற்காக மாணவர்களை தாக்குவது, கடுமையான வார்த்தைகளை கொண்டு திட்டுவது, பேருந்தை வழிமறித்து நிறுத்துவது, ஓட்டுநர், நடத்துனரை தரக்குறைவாக பேசுவது சட்டப்படி குற்றமாகும்.
ஏம்மா @RanjanaNachiyar நீங்க தான் Moral Policing பண்ற ஆளா?!! #BJparty 🤡 pic.twitter.com/DOjRFeg2oq
— இசை (@isai_) November 4, 2023
இது தொடர்பாக நடிகை ரஞ்சனா மீது போக்குவரத்து ஊழியர் சரவணன் புகாரளித்தார். அதை தொடர்ந்து அவரை போலீசார் வீட்டுக்கு சென்று கைது செய்தார்கள். அப்போது அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மறுபக்கம் திமுகவினர் நடிகை ரஞ்சனாவின் செயலை விமர்சித்து வருவதுடன், விளம்பரத்துக்காக இவ்வாறு செய்தாக குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை செயலாளர் இசை நடிகை ரஞ்சனா குறித்து பகிரப்பட்டு வரும் மீம் வீடியோ ஒன்றை எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில், நடிகை ரஞ்சனா சிகரெட் பிடிப்பதைபோன்ற ரீல்ஸ் காட்சி உள்ளது. "சாமியார்போல் 100 வருடம் வாழ நினைக்கவில்லை. நான் நினைத்தபடி 40 வருசம் வாழ்ந்துவிட்டு போகிறேன்." என்ற சினிமா வசனத்துக்கு ரீல்ஸ் செய்ததைபோல் அந்த காட்சி உள்ளது. இதனை பகிர்ந்து "ஏம்மா ரஞ்சனா நாச்சியார், நீங்க தான் Moral Policing பண்ற ஆளா?!! பிஜேபி" என்று குறிப்பிட்டு கோமாளி ஸ்மைலியை போட்டு உள்ளார்.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications