இது லிஸ்ட்லயே இல்லையே.. திமுக எடுத்த பாஜகவின் அஸ்திரம்.. இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
சென்னை: மகளிர் உரிமை தொகை திட்டத்தை நேற்று தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதை இந்தியில் சப்-டைட்டில் மற்றும் தலைப்புடன் வீடியோக்களை வெளியிடும் பணியினை திமுக ஐடி விங் செய்துள்ளது. பாஜக இந்தியில் சப் டைட்டில் போட்டு திமுகவினர் வீடியோவை பரப்பிய நிலையில் அதற்கு பதிலடியாகவே இந்த திட்டத்தை திமுக முன்னெடுத்துள்ளது.
சனாதன சர்ச்சைக்கு பிறகு வட இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலுமே தமிழ்நாட்டை அதிகம் கவனிக்க தொடங்கி உள்ளன. தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் தேசிய அளவில் பேசுபொருளாகி வருகிறது. இதற்கு காரணம் தமிழக பாஜகவினர் தான் என்று கூறப்படுகிறது.

தமிழக பாஜகவினர் திமுக தலைவர்கள் பேசும் வீடியோக்களை உடனுக்குடன் இந்தியில் சப் டைட்டில் போட்டு வெளியிடுகிறார்கள். அவை தேசிய ஊடகங்களில் விவாதப்பொருளாகி வருகிறது. அதேபோல் பாஜகவின் ஐடிவிங்கும் பெரிய அளவில் அதை ஷேர் செய்து விவாதமாக்கி வருகிறது.
மதம் சார்ந்த விஷயங்கள் மற்றும் சனாதனம் குறித்து திமுக தலைவர்கள் பேசும் விஷயங்களை அதிக அளவில் பேட்டி எடுத்தும், அதற்கு பதில் அளிக்குமாறு வடநாட்டு தலைவர்களை தேசிய ஊடகங்கள் கேட்கின்றன.
அந்த வீடியோக்கள் அண்மை காலமாக தேசிய ஊடகங்களிலும், குறிப்பாக இந்தி ஊடகங்களிலும் அதிக அளவில் பேசுபெருளாகி வருகிறது. ஏற்கனவே வட இந்தியர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டாக வதந்திய பரவியும் தேசிய ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இருந்தது. ஒரு கட்டத்தில் அனைத்தும் வதந்தி என்று தெரிந்த பின்னரே பிரச்சனை இயல்பு நிலைக்கு வந்தது.
இந்த சூழலில் தான் வட இந்தியாவில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் சாதனைகள் தெரிய வேண்டும் என்பதற்காக, அவரது பேச்சுக்கள் இந்தியில் சப் டைட்டில் போட்டு வெளியிடும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.
நேற்று கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்து பேசும் போது, தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா அவர்கள், இனி இந்த பெயரை யாராலும் நீக்க முடியாது. இந்த பெயர் இருக்கும் வரை அண்ணா துரை தான் ஆள்கிறான் என்றார்.
அதேபோல் இந்த மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்கிறேன்.. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் உரிமை தொகை பெறுகிறார்களோ, அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள்" என கூறியிருந்தார். இந்த பேச்சை தான் இந்தியில் சப் டைட்டில் போட்டு, இந்தி நேஷனல் ஊடகங்களையும் திமுக டேக் செய்துள்ளது.
जब तक महिलाओं को यह मासिक अनुदान मिलता है, इसका मतलब है कि स्टालिन इस भूमि पर शासन करता है।@aajtak @indiatvnews @IndiaTVHindi#TNEmpowersWomen pic.twitter.com/62qzXUfNGm
— DMK (@arivalayam) September 16, 2023
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications