DMK - Vijay நான் வீட்டுக்கே போயிட்டேன்.. இன்னும் என்ன தனியா நின்னுக்கிட்டு பேசிட்டு இருக்கீங்க விஜய்

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாடு சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பைத் தொடர்ந்து அரசியல் மோதல் தற்போது சமூக வலைதளங்களிலும் தீவிரமடைந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசை கடுமையாக விமர்சித்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட நீண்ட ட்விட்டர் பதிவு புதிய அரசியல் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், விஜயின் விளக்கப் பதிவை கிண்டலடிக்கும் வகையில் திமுக ஐடி விங் வெளியிட்ட சமூக வலைதள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. "கண்ணா லட்டு தின்ன ஆசையா" திரைப்படத்தில் இடம்பெற்ற பவர்ஸ்டார் சீனிவாசன் - சந்தானம் காமெடி காட்சியை பகிர்ந்து, "கதறு கதறு" என்ற கேப்ஷனுடன் திமுக ஐடி விங் பதிவு வெளியிட்டுள்ளது.

DMK s IT wing mocked Vijay s long explanation post using a viral comedy clip triggering a fresh social media battle

திமுக ஐடி விங் பகிர்ந்த வீடியோவில் இடம்பெற்ற "நான் வீட்டுக்கே போயிட்டேன்.. இன்னும் என்ன தனியா நின்னுக்கிட்டு பேசிட்டு இருக்கீங்க விஜய்" என்ற டைலாக் போடப்பட்டு உள்ளது. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பு உதயநிதி சட்டபையில் பேசிவிட்டு, வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாமல் திமுக கட்சியினர் உடன் வெளிநடப்பு செய்தார்.

உதயநிதி விமர்சனத்திற்கு விஜய் சமூக வலைதளத்தில் நீண்ட விளக்கங்கள் அளித்தார். இதை கிண்டல் செய்யும் நோக்கில் திமுக ஐடி விங் இந்த பதிவு வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோவை திமுக ஆதரவாளர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

"மக்கள் அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளனர்" - விஜய்

சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் தனது அரசு வெற்றி பெற்றதை குறிப்பிட்ட விஜய், 22 பேர் எதிர்த்து வாக்களித்ததையும், 5 பேர் நடுநிலை வகித்ததையும், 60 பேர் பங்கேற்கவில்லை என்பதையும் குறிப்பிட்டார். இதன் மூலம் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது அரசுக்கு மக்களின் ஆதரவு இருப்பதாக வலியுறுத்தியுள்ளார் விஜய்.

அதேபோல், "சட்டமன்ற நிகழ்வுகளை மறைக்காமல் முழுமையாக நேரலையில் ஒளிபரப்பினோம்" என கூறிய விஜய், வெளிப்படைத்தன்மையை தனது அரசு பின்பற்றுகிறது என்றார்.

உதயநிதி விமர்சனத்திற்கு புள்ளிவிவர பதில்

"65 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசு" என்ற உதயநிதி ஸ்டாலின் விமர்சனத்திற்கும் விஜய் விரிவாக பதிலளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் 34.92 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாகவும், திமுக தனிப்பட்ட முறையில் 24.19 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், TVK ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற நிலையில், திமுக ஒரு கோடியே 19 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தரவுகள் என குறிப்பிட்ட விஜய், "அப்படிப் பார்த்தால் 76 சதவீத மக்கள் திமுகவை நிராகரித்துள்ளனர்" என்று எதிர் தாக்குதலும் நடத்தியுள்ளார்.

கூட்டணி அரசியல்

உதயநிதி சட்டமன்றத்தில் தவெக கூட்டணி மூலமாக தான் ஆட்சி அமைத்தது என கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு பதில் அளித்த விஜய் திமுக மற்றும் பாஜக கூட்டணி வரலாற்றைவிஜய் தனது பதிவில் நினைவூட்டியுள்ளார். 1999ஆம் ஆண்டு பாஜகவுடன் திமுக இணைந்ததை சுட்டிக்காட்டிய அவர், தற்போது தனது அரசை கூட்டணி அரசியல் மூலம் உருவான அரசு என விமர்சிப்பது முரண்பாடானது என தெரிவித்துள்ளார்.

மேலும், மதச்சார்பற்ற நிலைப்பாட்டின் காரணமாகவே காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல அமைப்புகள் தனது அரசை ஆதரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சட்டசபையில் தொடங்கிய மோதல் தற்போது முழுமையான டிஜிட்டல் அரசியல் போராக மாறியுள்ளது. ஒரு பக்கம் விஜய் தனது அரசை "மக்கள் அரசு" என விளக்க முயற்சிக்கிறார். மறுபக்கம் திமுக சமூக வலைதளங்களில் காமெடி வீடியோக்கள், மீம்கள் மற்றும் கேலி பதிவுகள் மூலம் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+