'டார்கெட் அண்ணாமலை'.. ஆரம்பிச்சு வச்ச காயத்ரி ரகுராம்.. கெட்டியாக பிடித்துக்கொண்ட டிஆர்பி ராஜா

Subscribe to Oneindia Tamil

சென்னை: "10 கேள்வி கேட்டு 4 மாசமாச்சு! இன்னும் பதிலும் வரல, பில்லும் வரல! அது சரி, 2 குறள் கூட அடுத்தவரிடம் கடன் கேட்கும் அண்ணாமலை , இதுக்கும் யார்டயாவது கேட்டு வாங்கனும்ல!" என்று திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை அணிந்துள்ள ரபேல் வாட்ச் குறித்து அரசியல் சர்ச்சைகள் எழுந்துள்ளது. BR 03 RAFALE என்கிற பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த வாட்ச்சை பெல் அண்ட் ராஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

வெறும் 500 வாட்ச்களை மட்டுமே அந்த நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், 149ஆவதாக தயாரிக்கப்பட்ட வாட்சை தான் அணிந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது பேட்டியில் கூறிருந்தார்.

டாஸால்ட் ஏசிவியேஷன்

டாஸால்ட் ஏசிவியேஷன்

பிரான்சில் இருந்து இந்தியா வாங்கி இருக்கும் ரஃபேல் போர் விமானத்தை தயாரித்த டாஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இணைந்து இந்த வாட்சை பெ அண்ட் ராஸ் நிறுவனம் தயாரித்துள்ளதே இந்த வாட்ச்சின் இவ்வுளவு பெருமைக்கு காரணமாக சொல்லப்படுகிறது. விண்வெளி வீரர்கள், போர் விமானிகள், கண்ணிவெடிகளை அகற்றும் வல்லுநர்கள் மற்றும் உயரடுக்கு போலீஸ் அதிகாரிகள் பெல் & ராஸ் வகை வாட்ச்களை தங்கள் வேலையில் ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டு இருந்தது.

தேசபக்தி

தேசபக்தி

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த ரபேல் வாட்ச் ரூ.5 லட்சம் ஆகும். இந்த வாட்சுக்கு பில் கோரி' அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார். இதற்கு அண்ணாமலையும் உடனே பதில் அளித்திருந்தார். 'ரஃபேல் விமான நிறுவனத்தின் வாட்ச், தேசபக்தி' என்று கூறிய அண்ணாமலை, 'வாட்ச் பில் மட்டுமல்ல, முதல்வர் குடும்பத்தினர் மற்றும் தமிழகத்தின் 13 அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை ஏப்ரலில் வெளியிடுகிறேன்' என்று கூறியிருந்தார்,

வாட்ச் பில்

வாட்ச் பில்

இந்நிலையில் பாஜகவிலிருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து, மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தீவிரமாக ட்விட்டரில் கருத்துக்களை காயத்ரி ரகுராம் வெளியிட்டு வருகீறார் வருகிறார். தினமும் அண்ணாமலையை விமர்சித்தே ட்விட் போட்டு வருகிறார். இதற்கு காயத்ரி ரகுராமை அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள், ஆனாலும் விடாமல் அண்ணாமலை விமர்சித்து வருகிறார். இன்றைய தினம் 'வாட்ச் பில் எங்க தம்பி?' என்ற ஒற்றை பதிவில் அண்ணாமலைக்கு எதிரான களேபரத்தை தொடங்கி வைத்தார்.,

டிஆர்பி ராஜா

டிஆர்பி ராஜா

இதை பிடித்துக்கொண்ட திமுக ஐடி விங் தலைவர் டிஆர்பி ராஜா, "10 கேள்வி கேட்டு 4 மாசமாச்சு! இன்னும் பதிலும் வரல, பில்லும் வரல! அது சரி, 2 குறள் கூட அடுத்தவரிடம் கடன் கேட்கும் அண்ணாமலை , இதுக்கும் யார்டயாவது கேட்டு வாங்கனும்ல!" என்று கேட்டுள்ளார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான திமுகவின் ஐடி விங் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக ஐடி விங்கைச் சேர்ந்த பலர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்னும் பில் தரவில்லை என்று கேலி செய்து டிரெண்டிங் செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+