கனிமொழிக்கு வந்த கோபம்.. "நரிகுறவர்கள்".. இப்படி ஒரு ஆட்சி இங்கே நடக்கும்போது இது ஷாக்தான்.. ட்வீட்!
திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: நரிக்குறவர் குடும்பம் ஒன்றை கண்டக்டர், பஸ்ஸில் இருந்து இறக்கி விட்டதற்கு, திமுக எம்பி கனிமொழி தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.. அரசு அலுவலர்களே இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவது கவலையளிக்கிறது என்றும் கனிமொழி ட்வீட் போட்டு வேதனை தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் செல்வமேரி.. மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று குளச்சல் பஸ் ஸ்டாண்டில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக மீன் கூடைகளுடன் அரசு பஸ்சில் ஏறினார்..
அப்போது பஸ்சில் துர்நாற்றம் வீசுவதாக கூறி பஸ் கண்டக்டர் அவரை இறக்கிவிட்டார்.-. இதுதொடர்பாக வீடியோ சமூக சோஷியல் மீடியாவில் பரவி, சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது... இந்த சம்பவம் தொடர்பாக அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்..

மீனவ பெண்
இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் ஏராளமான நரிக்குறவர்கள் வசித்து வருகிறார்கள்.. இவர்கள் பஸ் ஏறி தினமும், நாகர்கோவில் பஸ் ஸ்டாண்டிற்கு குழுக்களாக வருவது வழக்கம்.. இந்த பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்றுவட்டார நகர்ப்புற பகுதிகளில், இவர்கள் ஊசி பாசி விற்பனை செய்வார்கள்.. பகல் முழுக்க வியாபாரம் செய்துவிட்டு, சாயங்காலம் மறுபடியும் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் பஸ்ஸில் வள்ளியூர் செல்வது வழக்கம்..

தகராறு
எப்போதும் இவர்கள் குழுக்களாகவே வந்து குழுக்களாகவே திரும்பி செல்வார்கள்.. ஆனால் மாலை நேரங்களில் பஸ்ஸில் ஏறினால் இவர்களுக்குள் சத்தமாக பேசி கொள்வதும், சில சமயம் தகராறு செய்து கொள்வதும், கொஞ்ச நேரத்தில் சமாதானமாகிவிடுவதும் வழக்கம்.. இந்நிலையில், நேற்று மாலை 3 குழுக்களாக பிரிந்து பஸ்ஸில் ஏறியுள்ளனர்..

தம்பதி
அந்தவகையில், கணவன், மனைவி மற்றும் 7 வயதுடைய குழந்தை என 3 பேர் வடசேரி பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏறினர்.. அந்த பஸ் வடசேரி பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்றது. அப்போது பஸ்சில் தம்பதிக்குள் வழக்கம்போல் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது... இதனால் பஸ்ஸில் இருந்தவர்கள் முகம் சுளித்துள்ளனர்.. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த பயணிகள், அவர்களை கீழே இறக்கிவிடும்படி கண்டக்டரிடம் சொல்லி உள்ளனர்..
Recommended Video

நரிக்குறவர்
எனவே, பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே வந்த நிலையில் அவர்களை கண்டக்டரும் கீழே இறக்கி விட்டுள்ளார். அத்துடன், நரிக்குறவர் குடும்பத்தின் உடைமைகளையும் பஸ்சில் இருந்து வெளியே தூக்கி வீசியுள்ளார்... அதை பார்த்ததும் அந்த குழந்தை பயந்து கதறி அழுதது. இந்த சம்பவம் அத்தனையையும், அங்கிருந்த நபர் வீடியோவும் எடுத்துள்ளார். அதை சோஷியல் மீடியாவில் பதிவிடவும், பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பாக பஸ் கண்டக்டர், டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அதிர்ச்சி
இந்த சம்பவத்திற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.. அவர் பதிவிட்ட ட்வீட்டில், "சமூக பின்புலத்தை காரணமாக வைத்து பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவங்கள் அதிரவைக்கிறது. அனைவரும் சமம் என்ற கொள்கை உடைய ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறும் போது, அரசு அலுவலர்களே இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவது கவலையளிக்கிறது.சுயமரியாதை, சமத்துவம் ஆகிய சமூக நீதிக் கொள்கைகளை அனைவருமே நெஞ்சில் ஏந்த வேண்டும்'' என பதிவிட்டுள்ளார்.
-
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன?












Click it and Unblock the Notifications