சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹிந்தி படிங்க.. "எங்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை".. கனிமொழி எம்பி கண்டனம்

கனிமொழி எம்பி சொமேட்டோ நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை என சொமேட்டோ நிறுவனத்திற்கு கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் விகாஷ் என்ற இளைஞர்.. இவர் சொமேட்டோவில் சாப்பாடு ஆர்டர் செய்துள்ளார். ஆனால், ஆர்டர் செய்யப்பட்ட உணவு முழுமையாக டெலிவரி செய்யப்படவில்லை.

இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்

இதனால் விகாஷ், சம்பந்தப்பட்ட சொமேட்டோ சேவை மையத்தை தொடர்பு கொண்டு, பணத்தை திருப்பித் தரும்படி கேட்டிருக்கிறார்..

 மொழி பிரச்சனை

மொழி பிரச்சனை

அப்போது, "மொழி பிரச்சனையால் சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகத்திடம் இது குறித்து கேட்க முடியவில்லை" என்று சொமேட்டோ சேவை மையம் பதிலளித்து உள்ளது. இதற்கு விகாஷ், "தமிழ்நாட்டில் சொமேட்டோ செயல்பட்டால், அங்கு வாழும் மக்களின் மொழியை தெரிந்தவர்தான் வேலைக்கு அமர்த்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

 இந்தி மொழி

இந்தி மொழி

அதற்கு சொமாட்டோ நிறுவனமோ, "இந்தி நம்முடைய தேசிய மொழி.. எல்லோரும் குறைந்தபட்சம் இந்தி தெரிந்திருக்க வேண்டும்" என்று விகாஷிடம் தெரிவித்துள்ளது.. சொமோட்டோ நிறுவனத்தின் இந்த பதில்தான் பலருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. பலரும் கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள்... அந்த வகையில், திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழியும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கு யாரும் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை என்று சொமோட்டோ நிறுவனத்திற்கு பதிலடி தந்துள்ளார்.

Recommended Video

    தவறாக பேசிய ஊழியரை பணி நீக்கம் செய்து விட்டோம்.. மன்னிப்பு கேட்ட Zomato
     பதிலடி

    பதிலடி

    இது குறித்து கனிமொழி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே சில நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை செயல்பட்டு வருகிறது. நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாநில மொழியில் பேசுவதைக் கட்டாயமாக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

    நிறுவனம்

    நிறுவனம்


    முன்னதாக, சொமோட்டோ நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.. அதில், ''வேற்றுமையில்‌ ஒற்றுமை என்ற நம்‌ தேசத்தின்‌ மாறுபட்ட கலாச்சாரத்தின்‌ மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம்‌ காட்டிய ஊழியரை பணிநீக்கம்‌ செய்துள்ளோம்‌. பணிநீக்கம்‌ என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம்‌. மேலும்‌ மக்களின்‌ உணர்வுகளுக்கு எதிராக கருத்தைப்‌ பகிரக்கூடாது எனத்‌ தெளிவாக நாங்கள்‌ எங்கள்‌ முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்‌..

    விளக்கம்

    விளக்கம்

    இந்த வாடிக்கையாளர்‌ சேவை முகவரின்‌ அறிக்கைகள்‌ மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின்‌ நிலைப்பாட்டை குறிக்கவில்லை. ஒரு நிறுவனமாக, நாங்கள்‌ முழு பயன்பாட்டிற்காக தமிழ்‌ செயலியை உருவாக்குகிறோம்‌. நாங்கள்‌ ஏற்கெனவே மாநிலத்திற்கான தமிழில்‌ சந்தைப்படுத்தல்‌ முயற்சிகளை உள்ளூர் மயமாக்கியுள்ளோம்‌. உணவு மற்றும்‌ மொழி ஒவ்வொரு மாநிலத்தின்‌, கலாச்சாரத்தின்‌ 2 அடித்தளங்கள்‌ என்பதை நாங்கள்‌ புரிந்துள்ளோம்‌. அவை இரண்டையும்‌ நாங்கள்‌ முழுமையாக உணர்ந்துள்ளோம்‌ என மீண்டும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌'' என்று நீண்ட விளக்கம் தரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    DMK KP Kanimozhi condemns Zomato over Hindi Language issues
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X