’அண்டா’ அரசியலைக் கையிலெடுத்த திமுக.. உடன்பிறப்புகளை உற்சாகப்படுத்த ஹாட் பாக்ஸ்! குஷியான மா.செ.கள்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போதிருந்தே வாக்காளர்களை குஷிப்படுத்தும் வேலையில் இறங்கி உள்ளது திமுக தலைமை. "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" நிகழ்ச்சியின் மூலம் தொண்டர்கள் திமுக வாக்காளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் 'அண்டா' அரசியல் கையில் எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக திமுகவின் வாக்கு வங்கியை பலப்படுத்தும் வகையில், திமுக வாக்காளர்களுக்கு அண்டா, ஹாட் பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் 'கவனிப்பு' மிக அதிகமாக இருக்கும் என்கின்றனர் திமுக உடன் பிறப்புகள்.
2026 சட்டமன்ற தேர்தல் திமுகவுக்கு மிக முக்கியமானது. காரணம் இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் அடுத்தடுத்து இரு சட்டமன்ற தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றதில்லை அந்த மோசமான சாதனையை தகர்க்க வேண்டும் என்பதுதான் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் எண்ணம்.
அதை நோக்கியே அவரது அரசியல் திட்டங்களும் இருக்கிறது. திமுகவை பொருத்தவரை இதுவரை தனித்து போட்டியிட்டு வென்றதில்லை என்றாலும், சாதுரியமான முடிவுகளால் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றிருக்கிறது என்பதுதான் உண்மை.

2026 சட்டமன்ற தேர்தல்
எந்த காங்கிரசை எதிர்த்து திமுக ஆரம்பிக்கப்பட்டதோ அதே காங்கிரசுடன் தான் தற்போது பல ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கிறது. மேலும் பல கட்சிகள் திமுக கூட்டணிக்கு வருவதும் போவதுமாக இருந்திருக்கின்றன. ஆனால் திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு பிறகு அமைந்த கூட்டணி கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக வலுவாகவே இருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக, தவாக மற்றும் சில அமைப்புகளுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கப்பட்டது.
திமுக கூட்டணி
அந்தக் கூட்டணி 2021 சட்டமன்றத் தேர்தல், ஊரக -நகர்புற உள்ளாட்சித் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள், 2024 மக்களவைத் தேர்தல் ஆகிய தேர்தலை கடந்து 2026 சட்டமன்ற தேர்தலில் தொடர்கிறது. இடையில் கூட்டணியில் சில சிக்கல்கள் இருந்தாலும் அதை பெரிய அளவில் கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் வரும் தேர்தலிலும் இந்த கூட்டணி அப்படியே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் திமுக அதன் ஒட்டுமொத்த வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டாலே எந்த பிரச்சனையும் இல்லை.
அண்டா அரசியல்
மேலும் தொண்டர்கள் நிர்வாகிகளையும் இன்னும் உற்சாகப்படுத்த வேண்டும். இதை அடுத்து தான் அண்டா அரசியலை கையில் எடுத்திருக்கிறது திமுக. தமிழ்நாடு முழுவதும் திமுக தலைமையின் உத்தரவின் பேரில் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்தந்த ஒன்றிய செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட, வார்டு வாரியாக சென்று திமுக நிர்வாகிகள், பூத் ஏஜென்ட்கள் மற்றும் திமுக உடன் பிறப்புகளை சந்தித்து வருகின்றனர். இது தொண்டர்களை தேர்தலுக்கு தயார்படுத்தும் நடவடிக்கை என்றாலும், அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக திமுக தலைமை ஒரு அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறது.
திமுக பரிசு விநியோகம்
அதுதான் ஏற்கனவே சொன்னது போல அண்டா அரசியல். அமைச்சர்கள் இருக்கும் தொகுதிகளில் இருக்கும் வாக்காளர்களுக்கு இப்போது இருந்தே ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட அண்டா வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வெற்றி வாக்குச்சாவடி கூட்டங்களில் கலந்துகொள்ளும் தொண்டர்களுக்கும் ஹாட் பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அதிமுக கடந்த காலங்களில் குறிப்பிடத்தக்க தொகுதிகளை வென்ற கோவை, திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்த அண்டா அரசியல் சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது.
ஹாட் பாக்ஸ் பரிசு
அமைச்சர்கள் தற்போதே வாக்காளர்களை குஷிபடுத்தும் வகையில் அண்டா, ஹாட் பாக்ஸ், குத்துவிளக்கு, டிபன் கேரியர் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர். பிரபலமான ஒரு நிறுவனத்திடம் இருந்து மொத்தமாக பேசப்பட்டு கண்டெய்னரில் ஹாட் பாக்ஸ் இறக்கப்பட்டுள்ளதாம். மேலும் உள்ளூர் பாத்திரக்கடைகள் மூலமாக மொத்தமாக அண்டா ஆர்டர் செய்யப்பட்டு இருக்கிறது. வரும் காலங்களில் வாக்காளர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் 'ஸ்வீட் பாக்ஸ்' விநியோகமும் தொடங்கும் என்கின்றனர் திமுக உடன் பிறப்புகள்.
-
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications