2-வது டோஸ் தடுப்பூசி போட்டுகொண்ட ஸ்டாலின்.. 'நம்மையும், மக்களையும் பாதுகாப்போம்'.. சூப்பர் ட்வீட்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
Recommended Video
தடுப்பூசி போட்டுக் கொண்டு நம்மையும் - நாட்டு மக்களையும் பாதுகாப்போம் என்று மக்களிடம் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்..
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஏற்கனவே இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

அச்சுறுத்தும் கொரோனா
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 12,000-ஐ நெருங்கி விட்டது. உயிரிழப்பும் தினமும் தெடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவை விரட்டியடிக்க தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கொரோனவை ஒழிக்க தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஸ்டாலின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் குடும்பத்துடன் தங்கி இருந்த மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை திரும்பினார். இதனை தொடர்ந்து அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

தடுப்பூசி போட்டுக் கொண்டேன்
கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை கடந்த மார்ச் 9-ம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் செலுத்தி இருந்தார் மு.க.ஸ்டாலின். தான் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டது குறித்து மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:- இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி இன்று எடுத்துக் கொண்டேன்.
|
மக்களை பாதுகாப்போம்
இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும். நம்மையும் - நாட்டு மக்களையும் பாதுகாப்போம் என்று மக்களிடம் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஏற்கனவே இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications