"வணக்கம்..ம்மா.. ஸ்டாலின் பேசறேன்".. திமுகவிலிருந்து பறந்த போன்.. ரியா செம ஹேப்பி.. வைரலாகும் ஆடியோ

கவுன்சிலர் ரியாவுக்கு வாழ்த்து சொன்ன ஸ்டாலினின் ஆடியோ வைரலாகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: "வணக்கம்..ம்மா.. ஸ்டாலின் பேசறேன்".. என்ற ஒரு ஆடியோ சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Recommended Video

    'வணக்கம்..ம்மா.. ஸ்டாலின் பேசறேன்'.. சோஷியில் மீடியாவில் படு வைரலாகி வரும் ஆடியோ

    தேர்தல் வரப்போகிறது.. அதற்கான அனைத்து கட்சிகளும் தீவிரமாக களமிறங்கிவிட்டனர்.. சில கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையைகூட ஆரம்பித்துவிட்டன... ஒவ்வொரு கட்சியிலும் வியூகங்களும் பட்டையை கிளப்பி கொண்டிருக்கின்றன.

    DMK Leader MK Stalin Greets Transgender Over Phone

    அதில் முக்கியமானது திமுகதான்.. கொரோனா தடுப்பு குறித்த நடவடிக்கைகளில் ஒரு பக்கம் இறங்கி வந்தாலும், இன்னொரு பக்கம் தேர்தலில் தீவிரத்தை செலுத்தி உள்ளது... நாலாபக்கமும் வாக்குகளை அள்ளும் முயற்சியில் தினமும் ஈடுபட்டும் வருகிறது.

    அந்த வகையில், ஒரு ஆடியோ வைரலாகி வருகிறது.. இது நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது நிகழ்ந்த சம்பவமாகும்.. அப்போது 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது.. அதன்படி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு 2-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் திருநங்கை ஒருவர் போட்டியிட்டார்... அவர் பெயர் ரியா.. கருவேப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்.. திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்த நிலையில், அவர் அக்கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்தது.

    வாக்கு எண்ணிக்கையில் ரியா 2698 வாக்குகள் பெற்றார்.. அதாவது, அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 1751 வாக்குகளே பெற்றிருந்த நிலையில், ரியா 947 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.. தமிழகத்தின் முதல் திருநங்கை கவுன்சிலர் ரியா தான்.. இவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை சொன்னாலும், முதல் வாழ்த்து ஸ்டாலினிடம் இருந்துதான் சென்றுள்ளது. அந்த ஆடியோதான் இது!

    ரியாவுக்கு திமுக தலைவர் போன் செய்துள்ளார்.. "வணக்கம்மா.. ஸ்டாலின் பேசறேன்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்" என்கிறார்.. இந்த போனை கொஞ்சமும் எதிர்பார்க்காத ரியா, "வணக்கம் ஐயா.. ரொம்ப சந்தோஷம்.. திமுகவில் வெற்றியடைந்து, முதல் வாழ்த்தே உங்களுடையதுதான் ஐயா.. ரொம்ப நன்றி" என்று புளகாங்கிதத்துடன் சொல்கிறார். இந்த ஆடியோதான் தற்போது வைரலாகிறது.

    தேர்தலுக்கான திமுகவின் யுக்திகளுள் ஒன்றாகவே இது பார்க்கப்பட்டாலும், திருநங்கைகள் என்றாலே அவ்வளவாக மதிக்கப்படாத இருந்த நிலையை மாற்றி உடைத்தது மறைந்த கருணாநிதிதான் என்பதை இந்த தமிழ் சமூகம் மறுக்காது.. மறக்காது! திருநங்கை, திருநம்பி என்ற அழகான தமிழில் பெயரிட்டு அழைத்தார்.. இதில், பெரும்பங்கு எம்பி கனிமொழிக்குதான் போய் சேரும்.

    இதையடுத்து, திருநங்கைகளும் தேர்தல் அரசியலில் பங்கெடுத்துக்கணும் என்று ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசியது இந்த பாலின சமூகத்திடம் பெரும் வரவேற்பை பெற்று தந்தது.. இப்படி ஒரு அறிவிப்பை ஸ்டாலினே அறிவித்து, அதன்படி திருநங்கை ஒருவர் போட்டியிட்டு, அதில் வெற்றியும் பெற்று, அவருக்கு ஸ்டாலினே தன் வாழ்த்தை மனசார சொல்லி உள்ளது உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்றுதான்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+