"ஸ்டைல்" ஐகானாக மாறி வரும் ஸ்டாலின்.. "சிக்" உடையில் டெல்லியில் கலக்கல்!

டி-ஷர்ட், பேன்ட் அணிந்து டெல்லியில் வலம் வந்தார் மு.க.ஸ்டாலின்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டணி, பேச்சுவார்த்தை, ஆலோசனை கூட்டம் என இப்படி பரபரப்புக்கு நடுவிலும் ஸ்டாலினின் ஸ்டைலிஷ் லுக் பற்றிதான் பேச்சாக இருக்கிறது.

பொதுவாகவே கருணாநிதி குடும்பத்துக்கு என்று ஒரு ஜீன் உள்ளது. அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு யாருக்கும் வயது அவ்வளவாக தெரியாது.

இதில் அநியாயம் ஸ்டாலின்தான். வயசு 65 ஆகிறது. ஆனாலும் இன்னும் யூத்ஃபுல்லாக இருக்கிறார் மனுஷர்!!

தோற்றம்

தோற்றம்

இவர் 40 வயதை கடந்து நீண்ட காலம் ஆகியும் திமுக இளைஞர் அணி தலைவராகவே இருந்தார். அதற்கேற்ற தோற்றமும் அவருக்கு பெரிதும் கைகொடுத்தது.

 கலர் டி-ஷர்

கலர் டி-ஷர்

ஆனால் இதெல்லாம் சும்மா வந்து விடவில்லை. உடற்பயிற்சி செய்வதற்காகவே வீட்டில் தனியாக ‘ஜிம்' வைத்திருக்கிறார் ஸ்டாலின். நமக்கு நாமே பயணத்தின்போது, திடீரென கலர் கலர் டி- ஷர்ட் போட்டு, வயசு பையன்களின் காதில் புகைச்சலை தந்தார் ஸ்டாலின்.

 சுருள் முடி

சுருள் முடி

20 வருடங்களுக்கு முன்பு ஸ்டாலின் இப்படித்தான் இருந்தார். ஒல்லியான தோற்றத்துடன், முன்பக்க நெற்றியில் கற்றைமுடி புரள, கலர் கலர் சட்டையில் இருப்பார். இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்.

ஸ்வெட்ர்

ஸ்வெட்ர்

டெல்லிக்கு சோனியா காந்தியை சந்திக்க சென்றார் ஸ்டாலின். அப்போது ஒரு ஸ்வெட்டர் அணிந்திருந்தார். அதுவும் ஸ்லீவ்லெஸ் ஸ்வெட்டர்... சரி ஏதோ குளிருக்கு அணிந்திருப்பார் போல என்றே அனைவரும் நினைத்தனர்.

 செம லுக்

செம லுக்

ஆனால் அடுத்தநாள் டி-ஷர்ட் - பேன்ட் போட்டு அசத்தினார் ஸ்டாலின். அதுவும் கருப்பு கலர் டீ-ஷர்ட்டில் பார்க்கவே படு யங்காக காட்சி தந்தார் ஸ்டாலின். மேலும் அந்த டீ-ஷர்ட் மேல் ஸ்லீவ்லெஸ் ஸ்வெட்டர் போட்டு செம லுக்காகி விட்டார் ஸ்டாலின்.

 இளமை லுக்

இளமை லுக்

எப்பவுமே வெள்ளை வேட்டி சட்டையில் பார்த்து பார்த்து சலித்துவிட்ட திமுக தொண்டர்களுக்கு, தங்கள் தலைவரை கலர்ஃபுல்லாக பார்க்கவும் சந்தோஷம் தாங்க முடியவில்லை. மருமகன் சபரீசனைவிடவும், மகன் உதயநிதியைவிடவும் ஸ்டாலினின் லுக் போட்டாக்கள் இணையத்தை கலங்கடித்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+