"தாய்மொழியே நம் உணர்ச்சி! எழுச்சி! வளர்ச்சி!".. தாய்மொழி தினத்தில் மு.க. ஸ்டாலின் ட்வீட்
முக ஸ்டாலின் உலக தாய்மொழி தினம் வாழ்த்து தெரிவித்துள்ளார்
சென்னை: உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2000ம் ஆண்டில் இருந்து வருடந்தோறும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய்மொழி தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சர்வதேச தாய்மொழி தினம் நமது நாட்டிலும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் நம் தாய்மொழியும், தொன்மை வாய்ந்த மொழியுமான தமிழ் மொழியின் பெருமையையும் பாராட்டி சோஷியல் மீடியாவில் கருத்துக்களையும், பெருமைமிகு வரிகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
அதேபோல, அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்களும், இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் தமிழின் அருமை பெருமைகளை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டும், வெளிப்படுத்தியும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலினும் உலக தாய்மொழி தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: "வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்', 'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' என சொல்லி வளர்ந்தது தமிழினம்!
'வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்', 'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' என சொல்லி வளர்ந்தது தமிழினம்!
— M.K.Stalin (@mkstalin) February 21, 2020
தாய்மொழியே நம் உணர்ச்சி! எழுச்சி! வளர்ச்சி!
மொழிப்பாதுகாப்பே இனப் பாதுகாப்பு; தாய்மொழி போற்றுவோம்!
அனைவர்க்கும் #motherlanguageday2020 வாழ்த்துகள்! pic.twitter.com/SU9Ob87wPX
தாய்மொழியே நம் உணர்ச்சி! எழுச்சி! வளர்ச்சி! மொழிப்பாதுகாப்பே இனப் பாதுகாப்பு; தாய்மொழி போற்றுவோம்! அனைவர்க்கும் உலக தாய்மொழி தினம் 2020 வாழ்த்துகள்!, என கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications