மாசா மாசம் எனக்கு ரிப்போர்ட் வந்தாகணும்.. மு.க.ஸ்டாலின் போட்ட அதிரடி கட்டளை!
திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்கு ஸ்டாலின் உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார்
Recommended Video
சென்னை: சாட்டையை கையில் எடுத்துவிட்டார் ஸ்டாலின்.. இதுவரைக்கும் திமுக தலைவர் ஸ்டாலினிடம் இருந்து இப்படி "ஆர்டர்" வந்தது இல்லை.. அப்படி ஒரு கண்டிப்பான உத்தரவை பிறப்பித்திருக்கிறார்!
எதிர்பாராத வகையில் தேர்தலில் அபார வெற்றி பெற்றது திமுக. இதற்காக வெற்றி பெற்ற ஒவ்வொரு தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஓட்டு போட்டதற்காக மக்களுக்கு நன்றி சொல்லி வருகிறார்.
அரவக்குறிச்சியில் நன்றி தெரிவித்து பேசும்போதுகூட, "திமுக, மற்றும் கூட்டணி கட்சி எம்பி, எம்எல்ஏக்கள் பொதுமக்களை நாடி வந்து பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்த்து வைப்பார்கள்" என்றார்.
|
ஸ்டாலின் ட்வீட்
அதனால்தானோ, என்னவோ இப்போது வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்கு புது உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார். இது சம்பந்தமாக ஒரு ட்வீட் ஒன்றினையும் பதிவிட்டுள்ளார். அதில், "திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் தங்கள் தொகுதி மக்கள் பிரச்னைகள் குறித்த அறிக்கையை என்னிடம் வழங்க வேண்டும். இது வேண்டுகோள் இல்லை; கட்டளை!" என்று கூறியுள்ளார்.

ரிப்போர்ட்
மேலும் "நமக்கு வாக்களிக்க தவறியவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க தவறியவர்கள், வாக்களிக்க தவறிவிட்டோமே என்று சிந்திக்கக்கூடிய அளவுக்கு திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி, எம்எல்ஏக்கள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதனால்தான் "ஒவ்வொரு மாதமும் மக்கள் பிரச்சனைகள் குறித்த ரிப்போர்ட்டை எனக்கு கொடுக்க வேண்டும் தெரிவித்துள்ளார்.

முதல் அடி
இதுவரை இவ்வளவு கண்டிப்பான வார்த்தைகள் ஸ்டாலினிடம் இருந்து எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்கு சென்றதில்லை. அப்படியானால் மாபெரும் வெற்றியை தக்க வைக்க முதல் அடியை திமுக எடுத்து வைக்க தொடங்கி உள்ளது என்பது தெரிகிறது. அதனால்தான் "வேண்டுகோள் இல்லை இது கட்டளை" என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் ஸ்டாலின்.

பிரதிபலிக்கும்
ஓட்டு போட்டவர்கள் என்றில்லாமல், ஒட்டு மொத்த மக்களின் நலனில் அக்கறை செலுத்தும் திமுகவின் செயல்பாடுகளும், இனி மக்களாலும் உன்னிப்பாக கவனிக்கப்படும். இந்த வேகத்தில் எம்பிக்களும், எம்எல்ஏக்களும் களம் இறங்கினால், நிச்சயம் இதன் பலன் வருகிற தேர்தலில் பிரதிபலிக்கவே செய்யும்!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications