டெல்டாவில் திமுக 'ரைஸிங்'.. விடாமல் மல்லுக்கட்டும் அதிமுக - நிலவரம் என்ன?
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், டெல்டா பகுதியில் திமுக, அதிமுக இடையே கடும் மோதல் நீடிக்கிறது.
தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
தபால் வாக்குகளை பொறுத்தவரை 5,64,253 பேர் தபால் வாக்குகள் அளித்துள்ளனர். இவைகள் எண்ணப்படுவதற்கு 500 வாக்குகளுக்கு ஒரு மேஜை போடப்பட்டு காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டன.

டஃப் கொடுக்கும் அதிமுக
இதில், பல தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. காலை 11 மணி நிலவரப்படி, மொத்தம் 233 தொகுதிகளுக்கான முன்னணி நிலவரம் வெளியாகியுள்ளது. இதில், 136 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. 96 தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது.

திமுக முந்துகிறது
அப்படியே டெல்டா பக்கம் பார்த்தோமெனில், காலை 11 மணி நிலவரப்படி, திமுக 12 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும் முன்னிலை பெறுகின்றனர். டெல்டா அதிமுகவின் கோட்டை என்பது அனைவரும் அறிந்ததே. எனினும், திமுக தற்போது முன்னிலையில் உள்ளது.

அதிமுக 1 இடத்தில்
குறிப்பாக, நாகை மாவட்டத்தில் திமுக இரண்டு தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இங்கு, அதிமுக 1 இடத்தில் முன்னிலை பெறுகிறது. இதர கட்சிகளான மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக போன்றவை இன்னமும் தங்கள் கணக்கை தொடங்கவில்லை.

அதிமுக அதிர்ச்சி
திருவாரூர் மாவட்டத்திலும் திமுக முன்னிலையில் உள்ளது. இங்கு இதுவரை நான்கு தொகுதிகளில், திமுக முன்னிலை வகிக்க, அதிர்ச்சி அளிக்கும் விதமாக இதுவரை அதிமுக எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை. மற்ற கட்சிகளின் நிலையும் இதுவரை ஜீரோ தான்.

தடுமாறும் டிடிவி
தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை, திமுக ஐந்து தொகுதிகளிலும், அதிமுக மூன்று தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. இங்கு சற்று நீயா நானா போட்டி நிலவுகிறது. டிடிவி தினகரனின் அமமுக இங்கும் தடுமாறி வருகிறது.

ஆதரவற்ற நிலையில் மநீம
மயிலாடுதுறையில் இதுவரை அதிமுக 2 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், திமுக 1 இடத்தில் மட்டும் முன்னிலை வகிக்கிறது. இங்கு மட்டும் அதிமுக லீடிங்கில் உள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் டெல்டா பகுதிகளில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications