"செம" போட்டி.. திமுகவின் அபார வேகத்துக்கு "ஸ்பீட்பிரேக்" போடும் அதிமுக.. என்ன நடக்கிறது தொகுதிகளில்!

திமுகவின் பிரம்மாண்டமான வெற்றியை அதிமுக தடுத்து கொண்டிருக்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக மிகப் பெரிய மெஜாரிட்டியுடன் வென்று காட்டும் என்ற மொத்த கருத்து கணிப்புகளையும், அதிமுக உடைத்து கொண்டு வருகிறது.. பல்வேறு இடங்களில் திமுகவுக்கு டஃப் கொடுப்பதை இன்றைய வாக்கு எண்ணிக்கையில் பார்க்க முடிகிறது.

தேர்தலுக்கு முன்பு வந்த கருத்து கணிப்புகளை காட்டிலும், எக்ஸிட் போல்களை தான் தமிழக மக்கள் பெருமளவு எதிர்பார்த்தனர்..

காரணம், இதில் பெரிதாக ரிசல்ட்கள் மாறாது.. ஓட்டு போட்டு வந்தவர்களிடம் இருந்து எடுக்கப்படும் கணிப்பு என்பதால், இந்த எக்ஸிட் போல்கள் மீது அபரிமிதமான நம்பிக்கையை மக்கள் எப்போதுமே வைத்து வருகிறார்கள்.

 மெஜாரிட்டி

மெஜாரிட்டி

அப்படித்தான் இந்த முறையும் திமுகவுக்கு ஆதரவாகவே சொல்லப்பட்டது.. அதிலும் மெஜாரிட்டியுடன் திமுக வெற்றி பெறும் என்றும், அதிமுக 40 இடங்களை தாண்டுவதே கஷ்டம் என்றும் சொல்லப்பட்டது.. 35 முதல் 40 இடங்களா? என்று அதிர்ந்து போனது அதிமுக கூடாரம்.. தேர்தலுக்கு பிந்தைய இந்த கணிப்புகளை பார்த்துவிட்டு எடப்பாடியார் செம டெஷனில் இருப்பதாகவும்,. ஆனாலும் தன் நம்பிக்கையை கொஞ்சம் கூட இழக்கவில்லை என்றும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

 அதிமுக

அதிமுக

அதற்கேற்றபடி, இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகையில், அதிமுகவும் பல இடங்களில் முந்தி கொண்டு வருகிறது.. பல சீனியர் அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்தாலும், தொகுதி வாரியாக பார்க்கும்போது அதிமுகவின் வெற்றியும் அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது.. அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு என்று கருதப்பட்ட இடங்களில் எல்லாம் இரட்டை இலையே முன்னுக்கு வருகிறது.. இது திமுகவுக்கு ஒருவித சறுக்கல்தான்..

 திமுக

திமுக

இப்போதைய ரிசல்ட் வைத்து பார்க்கும்போதே திமுகவுக்கு வெற்றிதான்.. அதில் மாற்றமில்லை என்று தெரிந்தாலும், அபார வெற்றி என்ற எல்லை கோட்டை, தொட முடியாமல் போகும் சூழல் நிலவி வருகிறது.. இதற்கு என்ன காரணம் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.. அதிமுகவின் 10 வருட ஆட்சியின் அதிருப்தி, ஒருவித சோர்வு, பாஜகவுடன் கூட்டணி போன்ற மைனஸ் காரணங்கள் இருந்தாலும், பல்வேறு விஷயங்களில் அதிமுக மீதும் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கலாம் என்று தெரிகிறது.

அதிமுக

அதிமுக

இலவச வாஷிங் மெஷின் உள்ளிட்ட சலுகைகள் அடங்கிய தேர்தல் அறிக்கையும் இதற்கு ஒரு காரணமா? அல்லது தொகுதிகளில் வாரி இறைத்ததாக சொல்லப்பட்ட "தாராளங்கள்" காரணமா என்று தெரியவில்லை.. ஆனால், மெஜாரிட்டி என்ற விஷயத்திற்குள் அதிமுக வந்துவிட்டால், அது திமுகவுக்குதான் குடைச்சலை கண்டிப்பாக தரும் .

 நம்பிக்கை

நம்பிக்கை

மக்களுக்கு பாஜக மீதுதான் பெரும் வெறுப்பு இருந்தாலும் கூட அதிமுகவை மக்கள் முழுதாக நிராகரிக்கவில்லையே என்றே எண்ண தோன்றுகிறது.. இன்றைய முடிவு என்ன என்று நமக்கு உறுதியாக தெரியாவிட்டாலும், தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மெல்ல கொண்டிருக்கிறது.. திமுகவின் பிரம்மாண்ட வெற்றியை அதிமுக மெல்ல உடைத்து கொண்டிருக்கிறது... பார்ப்போம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+