சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக 158 இடங்களை வென்று தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்.. புதிய தலைமுறை பரபர சர்வே

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 151முதல் 158 இடங்கள் கிடைக்கும் என்றும் அதிமுக கூட்டணிக்கு 76 முதல் 83 இடங்கள கிடைக்கும் என்றும் புதிய தலைமுறை சர்வே முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் ஆட்சி மாற்றம் உறுதி என்பதாக உள்ளது. திமுக கூட்டணிக்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறி உள்ளது.

சட்டசபை தேர்தல் 2021 வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளதையொட்டி, மார்ச் 15 வரை நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவினை புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது .

தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஸ்டாலின் வர 37.51% பேர் விருப்பம் - புதிய தலைமுறை சர்வேதமிழகத்தின் அடுத்த முதல்வராக ஸ்டாலின் வர 37.51% பேர் விருப்பம் - புதிய தலைமுறை சர்வே

 158 இடங்கள் கிடைக்கும்

158 இடங்கள் கிடைக்கும்

புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளில், திமுக கூட்டணிக்கு 151முதல் 158 இடங்கள் கிடைக்கும் என்றும் அதிமுக கூட்டணிக்கு 76 முதல் 83 இடங்கள கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மநீமவுக்கு இல்லை

மநீமவுக்கு இல்லை

நாம் தமிழர் கட்சி, அமமுக, மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பு இல்லையே கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த கட்சிகளுக்கு வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரிக்கலாம் என்றே புதிய தலைமுறை சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

திமுகவுக்கு அதிகம்

திமுகவுக்கு அதிகம்

மண்டல வாரியாக பார்ததால் மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள தெற்கு மண்டலத்தில் உள்ள 60 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 45 முதல் 49 தொகுதிகள் கிடைக்கும் என்றும் அதிமுக கூட்டணிக்கு 11 முதல் 15 தொகுதிகள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிமுக அதிகம்

அதிமுக அதிகம்

கோவையை சுற்றி உள்ள மாவட்டங்களான மேற்கு மண்டலத்தில் உள்ள 42 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 14 முதல் 11 தொகுதிகள் கிடைக்கும் என்றும். அதிமுக கூட்டணிக்கு 28 முதல் 31 தொகுதிகள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. திருச்சி முதல் நாகை உள்ள மத்திய மண்டலத்தில் உள்ள 36 தொகுதிகளில் திமுக கூட்டணி 21 முதல் 22 தொகுதிகளை வெல்லும் என்றும், அதிமுக 14 முதல் 15 தொகுதிகளை வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை- திமுக அதிகம்

சென்னை- திமுக அதிகம்

விழுப்புரம், கடலூர் வேலூர் உள்ளிட்ட வடக்கு மண்டலத்தில் உள்ள 78 தொகுதிகளில் திமுக கூட்டணி 54 முதல் 59 தொகுதிகளை வெல்லும் என்றும், அதிமுக கூட்டணி 19 முதல் 24 தொகுதிகளை வெல்லும் என்றும் புதிய தலைமுறை கணிப்பில் கூறப்பட்டுள்ளது, சென்னை மண்டலத்தில் திமுக கூட்டணி 17 முதல் 18 இடங்களை வெல்லும் என்றும் அதிமுக கூட்டணி 0மதல் 1 தொகுதிகள் வரை மட்டுமே வெல்லும் என்றும் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
Puthiyathalaimurai opinion poll 2021 reports said dmk likely get 158 sets in tamil nadu assembly election 2021 but aiadmk get 76 to 83 seats in election .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X