170 தொகுதிகளில் திமுக போட்டி? காங்கிரஸுக்கு 18தான்? ஸ்டாலின் கறார்! ராமதாஸும் வர்றாராம்! அப்போ விசிக

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக 170 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாம். மீதமுள்ள 64 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கவும் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

முக்கியமாக இந்த கூட்டணியில் ராமதாஸ் தலைமையிலான பாமகவையும் சேர்க்க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறாராம். இதற்காக விசிக தலைவரும் நாடாளுமன்ற எம்பியுமான தொல்.திருமாவளவனிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

dmk tamil nadu assembly election 2026 2026

வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி என்பது கடுமையாகத்தான் இருக்க போகிறது. ஏனென்றால் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும்! திமுக ஆட்சி அமையக் கூடாது என்பதில் அதிமுக கூட்டணி கடுமையாக போராடி வருகிறது.

இதற்காக என்னென்ன வித்தைகள், வியூகங்களை இறக்க முடியுமோ அதையெல்லாம் ஆலோசனை செய்து வைத்துள்ளதாம். தேர்தல் பணிகளுக்காக 8 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கோவைக்கு செந்தில் பாலாஜிதான் பொறுப்பாளர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்!

இந்த நிலையில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்த அண்மையில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனையில் கடந்த தேர்தலில் கூட்டணி கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிட்டு எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றனர் என்பதை பொறுத்து வரும் சட்டசபை தேர்தலில் தொகுதி எண்ணிக்கையை ஒதுக்கலாம் என மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனராம்.

இதையடுத்து நீண்ட ஆலோசனைக்கு பிறகு 170 தொகுதிகளில் போட்டியிடலாம் என திமுக தலைமை முடிவு செய்துள்ளதாம். தமிழக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மைக்கு 117 அல்லது 118 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு என்பது தேவை. அந்த வகையில் 170 தொகுதிகளில் போட்டியிட்டு அருதி பெரும்பான்மை பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெற திமுக முடிவு செய்துள்ளதாம்.

மீதமுள்ள 64 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவும் திமுக முடிவு செய்துள்ளதாம். கடந்த தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி இந்த முறை 40 தொகுதிகளை கேட்கிறது. ஆனால் அந்த 25 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது.

இதனால் இந்த முறை 40 தொகுதிகளுக்கெல்லாம் வாய்ப்பே இல்லையாம். கடந்த முறை 18 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றதால் இந்த முறை 18 முதல் 20 தொகுதிகள் வரை வழங்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாம். மேலும் காங்கிரஸ் கட்சியில் பிரவீன் சக்கரவர்த்தி, திருச்சி வேலுசாமி உள்ளிட்டோரின் பேச்சுகளால் ஸ்டாலின் கோபத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடந்து முடிந்த பல்வேறு மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 40 தொகுதிகளை கேட்டு பிடிவாதம் பிடிப்பதால் 18 அல்லது 20 தொகுதிகளை கொடுப்போம். திருப்திப்பட்டால் வைத்துக் கொள்வோம், இல்லாவிட்டால் அவர்கள் கூட்டணியை விட்டு கூட வெளியேறி கொள்ளட்டும் என்ற முடிவுக்கு திமுக வந்துவிட்டதாம்.

அதே நேரம் கூட்டணியை மேலும் வலுப்படுத்த ராமதாஸ் தலைமையிலான பாமகவை கொண்டு வர ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறதாம். ராமதாஸ் அணிக்கு 7 இடங்களை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

ஒரு வேளை பாமக கூட்டணிக்கு வருவதால் விடுதலைச் சிறுத்தைகள் ஏதேனும் ஆட்சேபம் தெரிவிக்கும் என்பதால் திருமாவளவனை சமாதானம் செய்யும் முயற்சிகளில் ஸ்டாலின் இறங்குவார் என்றும் சொல்லப்படுகிறது. போட்டி கடுமையாக இருப்பதால் பாமகவை கூட்டணிக்குள் இழுக்க சற்று பொருத்துக் கொள்ளும்படி விசிகவுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் ஸ்டாலின் சொல்லியும் திருமா சமாதானம் ஆவாரா என்பதுதான் கேள்வியாக உள்ளது. அவர் ஒரு கொள்கையை வகுத்துவிட்டார் என்றால் அதை எந்த காரணத்திற்காகவும் சமரசம் செய்து கொள்ள மாட்டார். கூட்டணி கட்சிகளில் திருமாவளவன் மீது ஸ்டாலினுக்கு அதிக மரியாதை இருக்கிறது. அதே போல் திருமாவுக்கும்தான்! எனவே ராமதாஸ் தலைமையிலான பாமகவ கூட்டணிக்கு வந்தால் விசிக என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக கூட்டணியில் அதிமுக 160 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் கூட்டணி கட்சிக்கு 74 இடங்களை ஒதுக்கும் என்றும் தெரிகிறது. அதில் பாஜகவிற்கு 23 இடங்களும் அன்புமணி தலைமையிலான பாமகவிற்கு 23 இடங்களும் ஒதுக்கப்படும் என தெரிகிறது. இவர்களுக்கு 46 இடங்கள் போக மீதமுள்ள இடங்கள் தமாகா, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளுக்கு பிரித்துத் தரப்படும் என சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+