20, 10, 8, 6, 2.. இதான் உங்களுக்கு.. சொச்சத்தை விடுங்க... நம்பி வாங்க.. நல்லாருப்போம்.. செம ஸ்கெட்ச்
திமுக கூட்டணி கட்சிகளுக்கு சீட் எவ்வளவு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
சென்னை: திமுக 174 இடங்களில் போட்டியிட போவதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது.. கூட்டணிகளுக்கு நிறைய சீட் அள்ளி தந்துவிடாமல், அதேசமயம் அவர்களை அனுசரித்து செல்லவுமே இப்படி ஒரு யோசனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
வரும் தேர்தலில் அதிமுகவும், திமுகவும் பார்த்து பார்த்து ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து கொண்டிருக்கின்றன. அதனால்தான் இன்னும் ஒருத்தருடைய கூட்டணியும் முடிவுக்கு வரவில்லை...
பேச்சுவார்த்தையும் பகிரங்கமாக ஆரம்பிக்கவும் இல்லை. ஆனால், மறைமுகமாக பேச்சுவார்த்தை மட்டும் இரு தரப்பிலும் நடந்து கொண்டிருக்கிறது..

அதிருப்தி
அந்த வகையில், காங்கிரஸ் கட்சிக்கு 20 சீட் மட்டுமே தர முடிவாகி உள்ளதாம்.. 40 கேட்டு கொண்டிருக்கிறார்கள்.. ராகுல் காந்தி 2 முறை தமிழகம் வந்தும் வெறும் 20 சீட் தானா? என்ற அதிருப்தியில் காங்கிரஸ் உள்ளதாக தெரிகிறது.. அதற்காக கமலுடன் கூட்டணி அமைக்கவும் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஏற்கனவே செய்திகள் வந்தன.. ஒருவேளை அப்படி எதுவும் காங்கிரஸ் போய்விடக்கூடாது என்பதற்காக, 25 சீட் வரை வேண்டுமானால் தரலாம் என்கிறார்கள்.

ஆப்ஷன்கள்
அதேபோல, வைகோ விஷயத்தில் இந்த முறை பெரிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.. ஏனென்றால், அவருக்கும் திமுகவை விட்டால் வேறு ஆப்ஷன்கள் இல்லை.. முதலில் 20 கேட்டிருக்கிறார்.. இதில் 8-க்கு இறங்கி வந்ததாம் திமுக.. இருந்தாலும் வைகோ இரட்டை இலக்கம் என்பதிலேயே பிடிவாதமாக இருப்பதால், அவருடன் எந்தவித அதிருப்தியையும் சம்பாதித்து கொள்ள ஸ்டாலின் விரும்பவில்லையாம்.. அதனால் அதிகபட்சமாக 10 ஓகே ஆகும் என்கிறார்கள்..

திருமா
ஆனால், விசிகவுக்கு இதைவிட குறைவாக தருவதற்கான சூழல் உள்ளது.. மிஞ்சி போனால் அதாவது 5 அல்லது 6 சீட் ஒதுக்கலாம்.. 10 நாட்களுக்கு முன்பு கூட, விசிகவுக்கு வெறும் 2 சீட்தான் என்று செய்திகள் பரபரத்தன. அவ்வாறு இல்லாமல் 6 சீட் வரை ஒதுக்கீடு செய்ய திமுக யோசித்து வருகிறதாம். எனினும் இது தங்களுக்கு குறைவு என்றே விசிக நினைக்கக்கூடும்.

கம்யூனிஸ்ட்கள்
இதைதவிர, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 8 சீட் ஒதுக்கீடு செய்யப்படலாம்.. ஆனால் இவர்கள் தான் வைகோவைவிட அதிகமாக சீட் கேட்டவர்கள்.. அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட்டணி தலைமைக்கு இப்போது வரை கட்டுப்பட்டு விசுவாசமாக நடப்பதால் ஆளுக்கு 8 சீட் வரை தரப்படலாம்.. ஆனால், இதை இடதுசாரிகள் ஏற்காவிட்டால், இவர்களை கொத்தி கொண்டு போக, கமல் தயாராக இருக்கிறார் என்பது வேறு விஷயம்.

மெஜாரிட்டி
இதர கட்சிகளான முஸ்லீம் லீக், மமகவுக்கு தலா 2 தர வாய்ப்புள்ளதாம்.. இதைதவிர, கொங்கு மண்டல ஈஸ்வரன், வாழ்வுரிமை கட்சியையும் உள்ளே இழுத்து போட்டு ஆளுக்கு 2 சீட் தரலாம் என்ற யோசனையில் திமுக உள்ளதாக தெரிகிறது.எப்படி பார்த்தாலும் கூட்டணிகளுக்கு கூட, குறைய என்று 60 சீட் ஒதுக்கப்பட்டால்கூட, மிச்சம் 174 இடம் திமுகவின் கையில் உள்ளதால், அதில் 140-ல் மெஜாரிட்டியை காட்ட வேண்டும் என்று உறுதியுடன் உள்ளது..

கமல்
ஒருவேளை இதில் யார் வேண்டுமானாலும் கூட்டணியை விட்டு விலகலாமே தவிர, புதிதாக வேறு யாரும் இணைய வாய்ப்பில்லை.. ஏனெனில் கமல் கூட்டணி கதவை அடைத்தாகி விட்டது.. இன்று கே.என்நேருவும் அதை தெளிவுபடுத்தியாகி விட்டது.. அனைவரையும் அனுசரித்து செல்லும் முடிவில் திமுக இப்படி சீட் ஒதுக்க முடிவு செய்தாலும், மற்றதை முடிவு செய்வது அந்தந்த கட்சிகளே.. பார்ப்போம்!
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications