திமுக கூட்டணி 151 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும்.. 234 தொகுதிக்கும் மாலைமுரசு சர்வே வெளியீடு
சென்னை: மாலை முரசு தொலைக்காட்சி 234 தொகுதிகளுக்கும் கருத்துக்கணிப்பு நடத்தி இறுதி நிலவரத்தை வெளியிட்டுள்ளது, திமுக கூட்டணி 151 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும் என்றும், அதிமுக கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெறும் என்றும, அமமுக, மநீம ஒரு இடத்தில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், இழுபறியில் 27 தொகுதிகள் உள்ளதாகவும், தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்ல வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளது.
மாலைமுரசு தொலைக்காட்சி ஒவ்வொரு நாளும் 26 தொகுதிகளுக்கு கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டு வந்தது .இந்நிலையில் 234 தொகுகிளுக்கும் இறுதி நிலவரத்தை இன்று வெளியிட்டுள்ளது
இறுதி நாளான இன்று ஸ்டாலின், எடப்பாடி, எல்முருகன், கமல்ஹாசன், ஓபிஎஸ், குஷ்பு, உதயநிதி இவர்களில் யார் யார் வெல்ல வாய்ப்பு: என்பது குறித்தும், சென்னையில் எந்த கட்சி எந்த இடத்தில் வெல்லும் என்பதையும் தெரிவித்துள்ளது.

கடலூரில் செம்ம பைட்
டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக கூட்டணிக்கே அதிக ஆதரவு உள்ளதாக மாலைமுரசு கருத்து கணிப்பு வெளியிட்டது. எனினும் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் சில தொகுகளில் அதிமுக முன்னிலை வகிப்பதாக கூறப்பட்டுள்ளது. சில தொகுதிகளில் திமுகவிற்கு அதிமுக கடும் போட்டி அளிக்கும் என கூறியுள்ளத

கோவை ஈரோடு
இதனிடையே திருச்சி, திருவாரூர், பாபநாசம், தஞ்சாவூர், கும்பகோணம், ஒரத்தநாடு உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஊர்களில் திமுகவே முன்னிலையில் இருக்கிறது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் அதிமுக முன்னிலையில் இருந்தது. சேலம் மாவட்டத்திலும், கோவை, ஈரோடு,திருப்பீர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் திமுகவே அதிக இடங்களில் முன்னிலையில் இருந்தது.

தென்காசி மாவட்டம்
தென்மாவட்டங்களில் பல இடங்களில் திமுகவே முன்னிலையில் உள்ளதாக கூறியிருந்தது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எல்லா தொகுதிகள், பெரியகுளம், கம்பம், மதுரை தெற்கு, மதுரை கிழக்கு உள்பட பல்வேறு தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளதாகவும், பரமக்குடி, சோழவந்தான், மதுரை தெற்கு உள்ளிட்ட ஒரு சில தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளதாகவும் மாலைமுரசு தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரம் தென்காசி மாவட்டத்தில் மட்டும் தொகுதிகளில் மட்டும் அதிமுக முன்னிலை இருப்பதாக கூறப்பட்டிருந்தது. கோவில்பட்டியில் அமமுக வெல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டிருந்தது.

யார் வெல்வார்கள்
மாலை முரசு தொலைக்காட்சி இன்று வெளியிட்டஇறுதி நிலவரத்தில் ஸ்டாலின், எடப்பாடி,கமல்ஹாசன், ஓபிஎஸ், உதயநிதி, டிடிவி தினகரன் ஆகியோர் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. அதேநேரம் சீமான், குஷ்பு, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் தோல்வி அடையவாய்ப்பு உள்ளதாகவும் மாலைமுரசு கூறியுள்ளது

திமுக ஆட்சி
இந்நிலையில் மாலை முரசு தொலைக்காட்சி 234 தொகுதிகளுக்கும் கருத்துக்கணிப்பு நடத்தி இறுதி நிலவரத்தை வெளியிட்டுள்ளது, திமுக கூட்டணி 151 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும் என்றும், அதிமுக கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெறும் என்றும, அமமுக, மநீம ஒரு இடத்தில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், இழுபறியில் 27 தொகுதிகள் உள்ளதாகவும், தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்ல வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளது.
-
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு!












Click it and Unblock the Notifications