3 முறை மா.செ பதவி.. பட்டியலில் இருக்கும் 4 முன்னாள் அமைச்சர்கள்.. சீனியர்களை காலி செய்யும் திமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவில் 3 முறை மாவட்டச் செயலர்களாக பதவி வகித்து வந்த சீனியர் நிர்வாகிளான மூர்த்தி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட பலரும் பதவி இழக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த திமுகவின் சீனியர்களும் ஓரங்கட்டப்படுவதாக பார்க்கப்படுகிறது.

சட்டசபைத் தேர்தலில் தவெக ஆட்சியை பிடித்ததற்கு இளைஞர்களின் ஆதரவு முக்கியமாக அமைந்திருக்கிறது. இளைஞர்களும், பெண்களும் விஜய்க்கு ஆதரவாக இருக்கின்றனர். இதனால் திமுக செயற்குழுவில் மிகப்பெரிய மாற்றம் செய்ய தீர்மானங்கள் முடிவு செய்யப்பட்டுவிட்டது. கட்சியில் இளைஞர்களுக்கு பதவி கொடுக்க ஸ்டாலின் முடிவு எடுத்திருக்கிறார்.

DMK

அந்த வகையில் மாவட்டச் செயலாளர்களுக்கு 70 வயது வரம்பு நிர்ணயம், 3 முறை மட்டுமே மாவட்டச் செயலாளர் பதவி, தேர்தல் மூலமாக பொறுப்புகள் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் மாவட்டச் செயலர்களின் எண்ணிக்கையை 110ஆக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் திமுகவில் 70 வயதுக்கு மேல் மாவட்டச் செயலாளர்களாக இருக்கும் 13 பேர் பதவி இழக்கின்றனர்.

குறிப்பாக முன்னாள் அமைச்சர்களான எவ வேலு, கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரன், காந்தி, முத்துசாமி, ரகுபதி உள்ளிட்ட பலரும் பதவி இழக்கின்றனர். இவர்களின் இடத்திற்கு விரைவாக மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். தற்போது அடுத்தக் கட்டமாக 3 முறைக்கு மேல் மாவட்டச் செயலாளர் பதவி வகித்தவர்களின் பட்டியலை திமுக தலைமை தயார் செய்ய தொடங்கி இருக்கிறது.

இதன்படி முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தா.மோ.அன்பரசன், பெரிய கருப்பன், மூர்த்தி உள்ளிட்டோர் 3 முறை மாவட்டச் செயலாளர்களாக இருந்துவிட்டனர். இதன் மூலமாக திமுகவில் முன்னாள் அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டு அந்த இடத்திற்கு வேறு நிர்வாகிகளை கொண்டு வர தீவிரம் காட்டப்படுவதாக பார்க்கப்படுகிறது.

சீனியர்கள் கட்சி நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு திமுக தலைமையை எட்டி இருக்கிறது. இதன் காரணமாகவே ஸ்டாலின் சீனியர்களின் செயல்பாடுகளையும் சாடி இருந்தார். இந்த பதவிகளுக்கு இளைஞரணியில் இருந்து நிர்வாகிகள் நியமிக்கப்படலாம் என்று பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+