DMK Live Updates: அதிமுகவை நிராகரிக்கிறோம்.. தீர்மானம் நிறைவேற்ற ஸ்டாலின் அழைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனைத்து பிரிவு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அதிமுகவை நிராகரிப்போம் என ஆன்லைனில் தீர்மானம் நிறைவேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தார். இதையடுத்து மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் அண்ணா அறிவாயலத்திற்கு வந்துள்ளனர்.

Recommended Video

    #BREAKING டிசம்பர் 23 முதல் நேரடி பிரச்சாரம் - மு.க ஸ்டாலின்..!

    திமுக தலைவர் ஸ்டாலினும் வந்துள்ளார். அங்கு அவர் மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    Dec 20, 2020, 1:23 pm IST

    திமுக நிர்வாகிகளுக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து வேலை வாங்கமாட்டோம் -கே.என்.நேரு
    Dec 20, 2020, 1:17 pm IST

    ரஜினிகாந்த், கமல்ஹாசனால் ஏற்படும் போட்டியை சமாளிக்கவே மக்களிடம் செல்கிறோம் மும்முனை போட்டி ஏற்பட்டால் அது திமுகவுக்கு தான் சாதகம். வாய்ப்பிருந்தால் நடிகர்கள் சிலரும் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யக்கூடும் -கே.என்.நேரு.
    Dec 20, 2020, 12:51 pm IST

    வேட்பாளர்கள், தொகுதி குறித்து நீங்கள் கவலைப்படாதீர்கள். வெற்றி பெறுபவர்தான் வேட்பாளர். எந்த வாக்குப் பெட்டியை திறந்தாலும் அதில் உதயசூரியன்தான் உதிக்க வேண்டும். சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். மிஷன் 200 என வைத்து கொள்வோம். 200 தொகுதிகளில் ஒரு தொகுதி அல்ல, ஒரு இஞ்ச் கூட குறையக் கூடாது- ஸ்டாலின்.
    Dec 20, 2020, 12:51 pm IST

    அதிமுக அரசால் தமிழகம் 10 ஆண்டுகள் பாழாகி உள்ளதை மக்களுக்கு புரிய வையுங்கள். கொரோனாவால் மக்கள் துன்பத்தை அனுபவித்துள்ளார்கள். கொரோனாவால் பாதித்த மக்களுக்கு திமுக பல உதவிகளை செய்துள்ளது. ஒன்றிணைவோம் என்ற திட்டத்தை நாம் தொடங்கி பல உதவிகளை மக்களுக்கு செய்தோம்- ஸ்டாலின்.
    Dec 20, 2020, 12:42 pm IST

    சாலை வசதி, மருத்துவ வசதி, ரேஷன் கடைகள் இல்லை என கிராம மக்கள் சொல்வார்கள். கிராம மக்கள் சொல்லும் கோரிக்கைகளை பொறுமையாக கேளுங்கள். மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லுங்கள். எல்லோரையும் அரவணைக்க கற்றுக் கொள்ளுங்கள்- கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுரை.
    Dec 20, 2020, 12:41 pm IST

    கிராம சபை பிரச்சாரம் முடிந்தவுடன் நானே ஒவ்வொரு கிராமமாக செல்வேன். ஊராட்சி சபை கூட்டம் பயன்பட்டது போல் கிராம சபை கூட்டங்களையும் நடத்த வேண்டும். அதிமுகவை நிராகரிக்க வேண்டும் என்ற பிரசாரத்தையும் முன்னெடுக்க வேண்டும். டிச. 23 முதல் மக்களை சந்தித்து குறைகளை கேளுங்கள். கிராமங்களில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்.
    Dec 20, 2020, 12:41 pm IST

    ஆளும் கட்சியிடம் பணம் அதிகமாக இருக்கிறது, கொள்ளையடித்து வைத்திருக்கிறார்கள். பணமா, மக்களின் மனமா என்பதை ஆராய வேண்டும், மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் 10 ஆண்டுகளாக தொகுதி பக்கமே அதிமுகவினர் செல்லவில்லை. அனைத்து துறைகளிலும் தமிழகத்தை அதிமுக அரசு சந்தி சிரிக்க வைத்துவிட்டது- ஸ்டாலின்.
    Dec 20, 2020, 12:40 pm IST

    எல்லோரும் எல்லோருக்காகவும் உழைக்க வேண்டும். சொந்த கட்சிக்கு துரோகம் செய்யக் கூடாது, ஆளும் கட்சிக்கு அனுசரணையாக நடக்கக் கூடாது. அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும். அதிமுக அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதியில் பணம் விளையாடும். அதிமுக அமைச்சர்களை தோற்கடிக்க நாங்களும் வியூகம் வகுப்போம் . நீங்களும் உங்கள் பங்கிற்கு வியூகம் வகுத்துவிடுங்கள்.
    Dec 20, 2020, 12:40 pm IST

    நமக்குள் இருக்கும் மாறுபாடுகள், வேறுபாடுகளை தூக்கி எறியுங்கள். திமுகவை திமுகவினரால்தான் தூக்கி எறிய முடியும் என அண்ணா சொன்னார். அண்ணா சொன்னதற்கு காரணம் திமுகவில் உள்ள உட்கட்சி பகைதான். அனைத்து தொண்டர்களின் உழைப்புக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்.
    Dec 20, 2020, 12:40 pm IST

    மத்தியில் தாதாக்கள் ஆட்சி நடைபெறுகிறது. மாநிலத்தில் பணப்பலம் கொண்ட ஆட்சி நடைபெறுகிறது. இருமுனை தாக்குதல் இல்லை, தற்போது நம் மீதான தவறான பிரசாரத்தால் மும்முனை தாக்குதல் இருக்கிறது. தேவையில்லாமல் சிலரை கட்சி தொடங்க கட்டாயப்படுத்துகிறார்கள். உண்மையான வீரனுக்கு கிளியின் கழுத்துதான் தெரிய வேண்டும். திமுக வச்சக் குறி தப்பாது என நிரூபிப்போம்- ஸ்டாலின்.
    Dec 20, 2020, 12:39 pm IST

    திமுக கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளர் யார். உதயசூரியன்தான் வேட்பாளர், கருணாநிதிதான் வேட்பாளர். உதயசூரியனையும் கருணாநிதியையும் மனதில் வைத்து செயலாற்றுங்கள். திமுக ஆட்சி மலர வேண்டும். நாம் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என நினைக்காதீர். திமுக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என கருதுங்கள். ஒரு கை தட்டினால் ஓசை வராது. தனிமரம் எப்போதும் தோப்பாகாது. தமிழகத்தை வாழவைப்பதற்கான தேர்தல் இது. 5 முறை தமிழகத்தை ஆண்டோம், 6ஆவது முறையும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும்- ஸ்டாலின்.
    Dec 20, 2020, 12:39 pm IST

    உங்கள் சக்தியை முழுமையாக கொடுக்க வேண்டும். ஆட்சி அமைக்க 117 இடங்களில் வெற்றி பெற்றால் போதும். 117 இடங்களுக்காக நாம் இவ்வளவு கஷ்டப்படத் தேவையில்லை. 117 இடங்களுக்காக நாம் கட்சி நடத்தவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியை தவிர்த்து மற்ற தொகுதிகளில் வென்றோம். அதுதான் உண்மையான வெற்றி. அத்தகைய வெற்றியை முழுமையாக பெற அனைவரும் முழுமுயற்சி எடுக்க வேண்டும்- ஸ்டாலின்.
    Dec 20, 2020, 12:38 pm IST

    மிக முக்கியமான காலக்கட்டத்தில் இந்த கூட்டத்தை நடத்துகிறோம்- ஸ்டாலின். அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு. இந்த கூட்டத்தில் இருப்பவர்களிடம்தான் 234 தொகுதிகளும் இருக்கிறது. அண்ணா, கருணாநிதி ஆகிய இரு பலங்கள் இருக்கின்றன- ஸ்டாலின்.
    Dec 20, 2020, 12:00 pm IST

    காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சிக்கும் வகையில் துரைமுருகன் பரபரப்பு பேச்சு. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளில் வலிமையான தலைவர்கள் இல்லாததால் அந்த இயக்கங்கள் குன்றிவிட்டது. சோனியா, சீதாராம் யெச்சூரி போன்றோரின் தலைமைத்துவத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் துரைமுருகன் பேச்சு.
    Dec 20, 2020, 11:50 am IST

    தேர்தல் 2021-ஐ ஒன்றிணைந்து களம் காண்போம்- திமுக. மக்களிடம் செல்வோம், வெல்வோம், தமிழகம் மீட்போம்- திமுக பிரசாரம்.
    Dec 20, 2020, 11:31 am IST

    புதிய விடியலை நோக்கி நாம் ஒன்றாக பயணிப்போம்- காணொலியில் ஸ்டாலின் அழைப்பு
    Dec 20, 2020, 11:15 am IST

    www.werejectadmk.com என்ற இணையதளத்தில் உருவாக்கம். இந்த இணையதளத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தீர்மானம் நிறைவேற்ற ஸ்டாலின் அழைப்பு.
    Dec 20, 2020, 10:58 am IST

    வேலைவாய்ப்பின்மை, ஊழல், லஞ்சம் உள்ளிட்டவை காணொலி காட்சியில் இடம்பெற்றன. அதிமுகவை நிராகரிக்கிறோம் என சித்தரிக்கப்பட்ட காட்சிகள் காணொலி காட்சியில் இடம்பெற்றன.
    Dec 20, 2020, 10:56 am IST

    ஜனவரி 10-ஆம் தேதி வரை சுமார் 16000 கிராம சபை கூட்டங்களை நடத்த முடிவு- துரைமுருகன்
    Dec 20, 2020, 10:55 am IST

    தேர்தல் பிரசாரம் குறித்த காணொலி காட்சி வெளியிடப்படுகிறது. திமுகவின் தேர்தல் பிரசாரம் குறித்து காணொலி காட்சி வெளியிடப்படுகிறது. வரும் 23-ஆம் தேதி முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை கிராம சபை கூட்டங்கள்.
    Dec 20, 2020, 10:32 am IST

    திமுக மேடையில் இடம்பெற்ற ''ஸ்டாலின் தான் வாராரு; விடியலை தரப்போறாரு '' என்ற புதிய லோகோ
    Dec 20, 2020, 10:32 am IST

    திமுக தலைவர் ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார். அண்ணா அறிவாலயத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் வருகை தந்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் தொடங்கியது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசி வருகிறார்.

    DMK Live Updates: MK Stalin going to announce something in Anna Arivalayam
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+