தேர்தலில் ஸ்டாலினின் கொளத்தூர் நிலைமையை பார்த்தீங்களா.. பாயிண்ட் பிடித்த இன்பதுரை
சென்னை : வடசென்னை தொகுதிக்குட்பட்ட கொளத்தூர் சட்டசபை தொகுதியில் 2021 சட்டசபை தேர்தலை விடவும் சுமார் 15 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் நடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலமாக 2004ல் மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு பின் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளையும் வென்ற தலைவர் என்ற சாதனையையும் மு.க.ஸ்டாலின் படைத்துள்ளார். என்னதான் திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்தாலும், வாக்கு சதவிகிதம் 6 சதவிகிதம் வரை குறைந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதேபோல் 2019ல் அதிமுக கூட்டணியின் வாக்கு சதவிகிதம் 18ஆக இருந்த நிலையில், தற்போது அதிமுகவின் கூட்டணி வாக்கு சதவிகிதம் 22ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் லோக்சபா தொகுதிகளில் பெற்ற வாக்குகளில் தொகுதி வாரியாக வெளியாகி பல்வேறு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. வடசென்னை லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 3,39,222 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளார். இவர் மொத்தமாக வடசென்னை தொகுதியில் 4,97,333 வாக்குகளை பெற்றுள்ளார்.
இவருக்கு பின் 2வது இடம் பிடித்த அதிமுக வேட்பாளர் மனோகர் 1,58,111 வாக்குகளை பெற்றுள்ளார். அதேபோல் 3வது இடம்பிடித்த பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 1,13,318 வாக்குகளை பெற்றுள்ளார். வடசென்னை தொகுதியில் பெரம்பூர், கொளத்தூர், ஆர்கே நகர், ராயபுரம், திருவிக நகர், திருவொற்றியூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலை விடவும் இந்த லோக்சபா தேர்தலில் வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. 2021 சட்டசபை தேர்தலில் திமுக வேட்பாளரான மு.க.ஸ்டாலின் 1,05, 522 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். ஆனால் இந்த லோக்சபா தேர்தலில் கொளத்தூர் சட்டசபை தொகுதியில் 15,723 வாக்குகள் குறைவாக பெற்றுள்ளனர். இது திமுகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி இன்பதுரை, தனித்து நின்ற அதிமுக தனது வாக்கு வங்கியை தக்க வைத்துள்ளது!கூட்டணியோடு நின்று அதிக ஸீட் பெற்றும் திமுகவுக்கு 6% வாக்கு சரிவு! கொளத்தூரில் ஸ்டாலின் 21ல் பெற்றதை விட இம்முறை அங்கு 15723 ஓட்டு திமுகவுக்கு குறைவு!எனவே இதை ஸ்டாலினின் செல்வாக்கு சரிவு என கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications