விஜய் பற்றி அலட்டிக்கொள்ள வேண்டாம்.. கண்டுக்காதீங்க.. டாப் தலைகளுக்கு.. திமுக போட்ட உத்தரவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பேச்சுகளுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இதுவரை பதில் அளிக்கவில்லை. அதே போல திமுகவின் டாப் தலைவர்களும் பதில் அளிக்க தேவை இல்லை என்று வாய்மொழி உத்தரவு அளிக்கப்பட்டு உள்ளதாம்.

சமீபத்தில் மதுரையில் நடந்த மாநாட்டில் விஜய், முதல்வர் ஸ்டாலினை கடுமையாகக் கேலி செய்த போதிலும், ஸ்டாலின் இதுவரை விஜய் குறித்துப் பேசியதில்லை. முதல்வர் ஸ்டாலினை விஜய் அங்கிள் அங்கிள் என்று கடுமையாக பேசினார். விஜயின் பேச்சு திமுகவினர் இடம் மட்டுமின்றி.. பொதுவாகவே அரசியல் களத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

mk stalin vijay

ஸ்டாலின் விஜயை கண்டுகொள்ளவில்லை

ஆனால் இதற்கு ஸ்டாலின் பதில் அளிக்கவில்லை. அதன்பின் விஜய் தனது பயணத்தில் பேசிய விஷயங்கள் எதற்கும் ஸ்டாலின் பதில் அளிக்கவில்லை. விஜயை ஒரு பொருட்டாக கூட ஸ்டாலின் பார்ப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே விஜயின் பேச்சு, எப்படியாவது ஸ்டாலினை பேச வைக்க வேண்டும் அல்லது விமர்சனத்தைப் பெற வேண்டும் என்ற திட்டத்துடன் அமைந்திருந்தது.

"அங்கிள்" என்று சொன்னால் ஸ்டாலின் கோபப்பட்டு விமர்சிப்பாரா, அல்லது தனக்கு பதிலடி கொடுத்து தன்னை முக்கியத்துவம் வாய்ந்தவராகப் பார்க்க வைப்பாரா என்ற நோக்கத்துடன் விஜய் பேசியதாகத் தோன்றியது. ஆனால், விஜய் கருத்துக்கு பதிலடி தர வேண்டாம் என திமுக மேலிடம் கட்சித் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் பற்றி பேச வேண்டாம்

இப்போதும் கூட விஜய் தனது பயணத்தில் ஸ்டாலின் குடும்பத்தை தாக்கி பேசி வருகிறார். ஸ்டாலின் வீடு பற்றியும், வெளிநாட்டு பயணம் பற்றியும் பேசி வருகிறார். முதல்வர் ஸ்டாலினின் பயணங்கள் "மாநிலத்திற்கு முதலீடு கொண்டுவரவா அல்லது வெளிநாட்டில் தனிப்பட்ட முதலீடுகளைப் பாதுகாப்பதற்காகவா?" என்று அவர் கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் உள்ள மீனவ சமூகத்திற்கான பிரச்சினைகள் தொடர்பாக பாஜக மற்றும் திமுகவை விமர்சித்த விஜய், பாஜக "பிரித்தாளும் அரசியல்" செய்வதாகக் கூறினார்.

மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்களை இந்தியர்கள் என்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மட்டும் தமிழ்நாட்டு மீனவர்கள் என்றும் தனித்துக் காட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், மீனவர் பிரச்சினைகள் குறித்து ஸ்டாலின் கடிதங்கள் மட்டுமே எழுதுகிறார் என்றும், உறுதியான நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

விஜய் பற்றி பேச வேண்டாம்

ஆனால் விஜய் பற்றி எல்லாம் இதற்காக பேச வேண்டாம் என்று திமுகவிற்கு ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளாராம். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பேச்சுகளுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இதுவரை பதில் அளிக்கவில்லை. அதே போல திமுகவின் டாப் தலைவர்களும் பதில் அளிக்க தேவை இல்லை என்று வாய்மொழி உத்தரவு அளிக்கப்பட்டு உள்ளதாம்.

செயலாளர் அளவில் உள்ள சிலர் மட்டும் இப்போதைக்குப் பதிலடி தரட்டும் என்றும், இதற்கு மேல் யாரும் பதிலடி தர வேண்டாம் என்றும் திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. விஜய் அவர்களுக்குப் போட்டியே இல்லை என்றும், அவரைப் பொருட்படுத்த வேண்டாம், முக்கியத்துவம் தர வேண்டாம் என்றும் கட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+