திருமாதான் முக்கியம்.. டேபிளை தட்டி சொன்ன ஸ்டாலின்.. ராமதாஸ் கோபத்திற்கு காரணம்? என்ன நடந்தது?
சென்னை: ராமதாஸ் தரப்பு பாமகவை கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டை முதல்வர் ஸ்டாலின் எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணிக்கு இவர்களை கொண்டு வருவது சரியாக இருக்காது என்று ஸ்டாலின் முடிவெடுத்துவிட்டாராம்.
அதாவது பாமகவின் எந்த அணி கூட்டணிக்கு வந்தாலும் அது கூட்டணி சமன்பாட்டை சீர்குலைக்கும். அடுத்ததாக விசிக திருமாவளவன் அதிருப்தி அடையும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது திருமா இதை நேரடியாக எதிர்க்காமல் போகலாம். ஆனால் அவர் அதிருப்தி அடைய வாய்ப்புகள் அதிகம்.

திருமாவளவன் பேச்சு
ஏற்கனவே விசிக தலைவர் எம்பி திருமாவளவன் பேசுகையில், அதிமுக சனாதன சக்திகளின் கைகளில் சிக்கிவிட்டது என்பதை எண்ணி வருந்துகிறோம். அதேபோல் பாமக, பாஜக ஆகிய இரு கட்சிகளும் இருக்கும் அணியில் இடம்பெறப் போவதில்லை என்பதை முடிவு செய்துவிட்டோம். அந்த இரு கட்சிகளின் சாதி மற்றும் மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியலை முன்னெடுக்கும் கட்சிகள். பாமகவின் ஒரு அணி மோடி தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.
பாமக ராமதாஸ் அணியை கூட்டணியை இணைத்துக் கொள்வது தொடர்பாக திமுக தலைமையே முடிவு செய்ய வேண்டும். நாங்கள் எந்த முடிவு எடுக்கக் கூடிய நிலை இல்லை. நாங்கள் 14 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்துவிட்டோம். அந்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். அதேபோல் திமுக தரப்பில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும், என்று கூறி இருந்தார்.
பாமக வேண்டாம்
இந்த நிலையில்தான் தனக்கு நெருக்கமான தரப்பிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், விசிக நம்முடன் இருந்துள்ளது. நம்மிடையே இணக்கம் உள்ளது. நிறைய சிக்கல்களை கூட அவர்கள் நம்முடன் எதிர்கொண்டு உள்ளனர். நம்மை விட்டு செல்ல ஏற்ற வாய்ப்புகள் வந்த போது கூட அவர்கள் செல்லவில்லை. முக்கியமாக கொள்கை ரீதியாக நம்முடன் அதிகம் ஒத்துப்போவது விசிகதான்.
அவர்களை மதிக்க வேண்டியது நம் கடமை. நமக்கு திருமாதான் முக்கியம். அந்த வகையில் அவர்களை மனக்கஷ்டம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளாராம். இதையடுத்தே ராமதாஸ் தரப்பு பாமகவை கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டை முதல்வர் ஸ்டாலின் எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணிக்கு இவர்களை கொண்டு வருவது சரியாக இருக்காது என்று ஸ்டாலின் முடிவெடுத்துவிட்டாராம்.
ஸ்டாலின் நிலைப்பாடு
ஸ்டாலின் நிலைப்பாடு தெரிந்த பின்பே ராமதாஸ் கோபம் அடைந்து உள்ளாராம். இந்த நிலையில் திடீரென திமுக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பாமக நிறுவனரான ராமதாஸ். அதில்," தமிழ்நாட்டில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், மின்கட்டணத்தை நிர்ணயிப்பதிலும், வசூலிப்பதிலும் நடைமுறை எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் தமிழ்நாடு அரசு கடைபிடித்து வரும் அணுகுமுறையால் நடுத்தரமக்கள் அதிக மின் கட்டணம் செலுத்தவேண்டியிருப்பதுடன், பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாக வேண்டியிருக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகான மின்கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வலியிறுத்தி, அறிக்கை வெளியிட்டேன்.
இந்நிலையில் கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசியபோது, 2025-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகள், வணிக பயன்பாட்டிற்கான மின்இணைப்புகளுக்கு ஸ்மார்ட்மீட்டர் பொருத்த தமிழகஅரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 80 லட்சம் இணைப்புகளுக்கு பொருத்துவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஸ்மார்ட்மீட்டர் மென்பொருள் மூலம் இயங்கவுள்ளது. என்று கடுமையாக அறிக்கை வெளியிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications