பிடிஆர் சொல்லலைனா சரிதான்.. வேலையை பாருங்க.. எச்.ராஜாவின் வீடியோ.. செந்தில்குமார் பளீர் பதிலடி!
சென்னை: பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கொடுத்த பேட்டிக்கு திமுக எம்பி செந்தில்குமார் பதிலடி கொடுத்துள்ளார். நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனை பலரும் கடந்த சில நாட்களாக விமர்சனம் செய்து வந்ததை ஒப்பிட்டு செந்தில்குமார் இந்த விமர்சனத்தை வைத்துள்ளார்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் கடந்த வாரம் ஜிஎஸ்டி கவுன்சில் மீட்டிங் தொடர்பாக நிறைய ட்வீட்களை செய்து வந்தார். ஜிஎஸ்டி கவுன்சில் மீட்டிங்கிற்கு செல்லாதது ஏன் என்று விளக்கம் அளித்தார். அதே சமயம் இவர் தனது கொழுந்தியாளின் வளைகாப்பு விழாவிற்காக ஜிஎஸ்டி மீட்டிங்கிற்கு செல்லவில்லை என்று வதந்திகள் பரப்பப்பட்டது.
இந்த வதந்திகளுக்கு எல்லாம் பிடிஆர் கடுமையாக பதிலடி கொடுத்தார். மிகவும் கோபமாக, கடும் வார்த்தைகளை பயன்படுத்தி பிடிஆர் இணையத்தில் பலருக்கு பதில் அளித்தார்.

பிடிஆர்
பிடிஆர் இப்படி பலருக்கு எதிராக கடும் வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியது சர்ச்சையானது. பிடிஆருக்கு எதிராக பலர் அறிவுரைகளை வழங்கி இருந்தனர். முக்கியமாக திமுகவிலேயே சிலர் பிடிஆருக்கு அறிவுரை வழங்கி இருந்தனர். பிடிஆர் கொஞ்சம் கோபத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். அவர் தன்னை கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் போன்றவர்கள் அறிவுரை வழங்கி இருந்தனர்.

திமுக தரப்பு
திமுக கட்சிக்கு உள்ளேயே இவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்தது. இந்த நிலையில்தான் தற்போது எச். ராஜா பேட்டி ஒன்று சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. நேற்று ருத்ரதாண்டவம் படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த எச். ராஜா.. தமிழையும் இந்துவையும் பிரிக்க முடியாது. தமிழ் வேற இந்து வேறன்னு பேசக்கூடிய அளவுக்கு நீங்கள் செல்ல கூடாது. அது மத மாற்றம் செய்பவர்கள் வேலை. நீங்க வேணும்னே மத மாற்றத்துக்கு துணை போக வேண்டாம்னு உங்களை கேட்கிறேன்.
Recommended Video

தமிழ் தெரியுமா?
என்னை தமிழர் இல்லை என்று சொல்கிறார்கள். நான் சுத்தமான தஞ்சாவூர் காரன்.
உங்க எல்லாருக்கும் தமிழ் முழுசா தெரியுமா? ஒழுங்காக உங்களுக்கு ழவை உச்சரிக்க தெரியுமா ?இந்துவும் தமிழரும் வெவ்வேறுன்னு சொன்னது யாரு? நீங்கள் எல்லாம் என்னதான் பேசிகிட்டு இருக்கீங்க.. நீங்கள் எல்லாம் பிராஸ்டிட்யூட்ஸ்.. இந்த மீடியா பீப்பிள் எல்லாருமே பிராஸ்டிட்யூட்ஸ்தான். சீமான் அம்மா தமிழச்சியா? அவர் ஒரு மலையாளி.. என்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி எச். ராஜா நேற்று பேட்டி அளித்து இருந்தார்.

எச். ராஜா பேட்டி
எச். ராஜாவின் இந்த பேட்டி இணையம் முழுக்க வைரலானது. திமுக தரப்பிலும், நாம் தமிழர் தரப்பிலும் இதற்கு கண்டனங்கள் வந்திருந்தது. முக்கியமாக மீடியா பீப்பிள் எல்லாருமே பிராஸ்டிட்யூட்ஸ்தான் என்று கூறியது விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் எச். ராஜாவிற்கு செந்தில்குமார் எம்பி பதில் அளித்துள்ளார். பிடிஆர் பழனிவேல் ராஜனை பலரும் கடந்த சில நாட்களாக விமர்சனம் செய்து வந்ததை ஒப்பிட்டு செந்தில்குமார் இந்த விமர்சனத்தை வைத்துள்ளார்.
H.ராஜா தான சொன்னாரு.,
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) September 27, 2021
PTR சொல்லவில்லை இல்ல.,
அப்போ சரி.,
அப்போ சரி.,
எல்லோரும் போய் அவங்க அவங்க வேலைய பாருங்க.
Video Courtesy: Twitter @CMPChange
pic.twitter.com/S1aGYiOn2C
ட்வீட்
எச். ராஜா குறித்து செந்தில்குமார் செய்துள்ள ட்வீட்டில், எச்.ராஜா தான சொன்னாரு.,பிடிஆர் சொல்லவில்லை இல்ல., அப்போ சரி., அப்போ சரி., எல்லோரும் போய் அவங்க அவங்க வேலைய பாருங்க என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது பிடிஆர் பேசியதை பெரிதாக்கி விமர்சனங்களை செய்தவர்கள். எச். ராஜா என்றதும் எதுவும் பேசவில்லை.. இதையே பிடிஆர் பேசி இருந்தால் சர்ச்சையாக்கி இருப்பார்கள் என்று என்று பிடிஆருக்கு ஆதரவாக செந்தில்குமார் எம்பி பேசி இருக்கிறார். எச்.ராஜாவின் பேட்டி வீடியோவை வெளியிட்டு இந்த ட்வீட்டை செந்தில்குமார் செய்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications