நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை.. திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானது.

அதில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் பெரும் சவாலாக உள்ள நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருந்தார். அது போல் தற்போது தமிழக சட்டசபைத் தேர்தலில் அறிவித்துள்ளார்.
நீட் தேர்வால் தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் மருத்துவ கனவு நனவாக முடியாத நிலை உள்ளது. இந்த நீட் தேர்வால் பல மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நீட் தேர்வை ரத்து செய்ய திமுக சார்பில் பல முறை ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன.
அது போல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, நீட் தேர்வு உள்ளிட்ட திமுக எதிர்த்த விஷயங்களை தேர்தல் அறிக்கையில் கொண்டு வந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications