ரூ.4000 உதவி தொகை.. நகை கடன் தள்ளுபடி.. பெட்ரோல் ரூ.5 குறையும்.. நடுத்தர மக்களுக்கு "நச்" அறிவிப்பு
சென்னை: கொரோனாவால் தொழில்கள் நசிந்துபோயுள்ள சூழ்நிலையில், மக்களுக்கு உதவும் வகையில், அன்றாட விலைவாசியை குறைக்கும் வகையில் சில திட்டங்களை முன்மொழிந்துள்ளது திமுக தேர்தல் அறிக்கை.
ஆம்.. மக்கள் கையில் பணப் புழக்கம் இல்லாத இந்த காலகட்டத்தில் அவர்களை கூல் செய்வது போல அதிரடி வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது திமுக தேர்தல் அறிக்கை.
ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஏழை, எளியவர்களுக்கு தினசரி செலவை குறைக்கும் வகையிலான திட்டங்கள் என்ன சொல்லப்பட்டுள்ளது? இதோ பாருங்கள்:

பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும் என்கிறது தேர்தல் அறிக்கை. அதாவது தமிழக அரசு, வரியை குறைத்து எரிபொருள் விலையை குறைக்கும் என்று சொல்லியுள்ளது. இது மட்டுமல்ல சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. அதாவது, இப்போது மக்கள் புலம்பும் இரு விலைவாசி ஏற்றங்களையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

பால் விலை
அன்றாட பயன்பாட்டில் இடம் பெறும் மற்றொரு விஷயம் பால். அரசின், ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். ரேசன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்றும் இனிப்பு வாக்குறுதி தந்துள்ளார்.

ரூ.4 ஆயிரம்
கொரோனா காலத்தில் தவிக்கும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் உதவும் வகையில், ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா 4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று, திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முதியோர் & ஆதரவற்றோர் உதவித்தொகை ரூ.1500 ஆக அதிகரிக்கப்படும் என்பதும் ஏழைகளுக்கான அறிவிப்பு.

சொத்து வரி உயர்வு இல்லை
இது மட்டுமில்லை. சொத்துவரி அதிகரிக்க படாது என்று கூறி பால்வார்த்துள்ளது திமுக தேர்தல் அறிக்கை. கூட்டுறவு நகை கடன் 5 பவுன் வரை தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி என்று கூறியுள்ளது ஏழை, எளியவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திதான். ஆனால் இதற்கெல்லாம் மாநில அரசிடம் நிதி வசதி இருக்கிறதா என்ற கேள்விக்கு மட்டும் இன்னும் பதில் இல்லை.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications