DMK MANIFESTO: மகளிர் உரிமைத்தொகை டூ முதியோர் பென்ஷன் வரை.. 13 திட்டங்களின் உதவித்தொகைகள் உயர்வு – ஸ்டாலின்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி திமுகவின் தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத்தொகை, உ.யர்கல்வி பயிலும் மாணவிகளுக்கான புதுமைப்பெண், மாணவர்களுக்கான நான் முதல்வன், முதியோர் பென்ஷன், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, மீனவர்களுக்கான நிவாரண தொகை உள்பட பலவற்றின் தொகைகள் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதன்பிறகு முக்கிய 51 அறிவிப்புகளை ஸ்டாலினே வாசித்தார். இந்த அறிவிப்பில் பல்வேறு உதவித்தொகைகள் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

* மகளிர் மாதாந்திர உரிமைத்தொகை ரூ.1,000ல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படும்.
* மருத்துவ காப்பீட்டுக்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்
* மருத்துவ காப்பீட்டு தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.
* கல்லூரி மாணவ, மாணவியரின் உயர் கல்வி சேர்க்கையை அதிகரிக்க புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டத்தின்படி மாதந்தோறும் வழங்கப்ட்டு வரும் ஆயிரம் ரூபாய் இனி ரூ.1,500 ஆகு உயர்த்தி வழங்கப்படும்.
* உயர்கல்வி முடித்த 5 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் நான் முதல்வன் திட்டத்தில் ரூ.1,500 மாதவ உதவித்தொகையுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படும்.
* முதியோர் உதவித்தொகை ரூ.1,200ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்வு
* மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்.
* நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்தப்படும்.
* கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4,500 ஆக உயர்த்தப்படும்.
* பேரிடர் கால இழப்பீடுகள் ஹெக்டர் ஒன்றுக்கு இறவை பாசன பயிர்கள் மற்றும் நெல் பயிர்களுக்கு ரூ.25,000, நீண்டகால பயிர்களுக்கு ரூ.27,000, மானாவாரிப் பயிர்களுக்கு ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
* பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படும்.
* மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை ரூ.8,000ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தப்படும்.
* மீன்பிடி குறைவு கால சிறப்பு நிவாரணம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* சிறுபான்மையினர் தொழில் தொடங்க ரூ.30 லட்சம் கடனுதவி வழங்கப்படும்.
* இல்லதரசி கூப்பன்: 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பனை பயன்படுத்தி வாஷிங் மெஷின், டிவி, ஃப்ரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன் மற்றும்மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோக பொருட்களை, வருமான வரி செலுத்ததாக குடும்பங்களை சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கி கொள்ளலாம். அல்லது ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு மாற்றாகவும் பெற்று கொள்ளலாம்.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications