திமுக ஜாக்பாட் அறிவிப்பு! ரூ.8000 கூப்பன்.. TV, Fridge, மிக்சி, மைக்ரோவேவ் அவன்! யாருக்கு கிடைக்கும்
சென்னை: இல்லத்தரசி கூப்பன் என்ற பெயரில் 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பனைப் பயன்படுத்தி வாஷிங் மெஷின், டி.வி., ஃபிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை, வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக்கொள்ளலாம் அல்லது ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு புதிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தனி செயலி மூலம் பெறப்பட்ட கருத்துக்களை வைத்து தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டது. திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையில் குழு உருவாக்கப்பட்டது. திமுக தேர்தல் அறிக்கை செயலி, வாட்ஸ்அப், சமூக வலைத்தளங்கள் வழியாக கருத்துகள், பரிந்துரைகளைச் சேகரித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது.

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்கள் (விவசாயிகள், வணிகர்கள், தொழில் அதிபர்கள் உட்பட) கருத்துக்களைப் பெற ஜனவரி 3, 2026 சனிக்கிழமை புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டது. இக்குழுவில், திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், திமுக சொத்து பாதுகாப்புக் குழுச் செயலாளரும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா, திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா முன்னாள் எம்.பி., திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன், திமுக சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, திமுக மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் ஆ.தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஓய்வு) ஜி.சந்தானம், கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம்பெற்றனர்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் பின் வரும் வாக்குறுதிகளை வழங்கி உள்ளது
காலை உணவு திட்டம் விரிவாக்கம் : 8ம் வகுப்பு வரை விரிவு செய்யப்படுகிறது
உயர்கல்வி படிக்கும் 35 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்
தமிழ்நாட்டில் 10 புதிய டைடல் பார்க் அமைக்கப்படும்
திருச்சி, மதுரை, சேலம் அருகில் புதிய நகரங்கள் உருவாக்கப்படும்
மகளிர் உரிமை தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்
விவசாயிகளுக்கு நவீன பாம்பு செட் அமைத்து தரப்படும்
புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்ட தொகை 1500 ரூபாயாக உயர்வு செய்யப்படும்
சென்னையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும்
மத்திய - மாநில உறவு தொடர்பான நீதிபதி குரியன் ஜோசப் அறிக்கை நாடு முழுக்க எடுத்து செல்லப்படும்
சுய உதவிக்குழுவிற்கு பிணியின்றி ரூ.5 லட்சம் கடன்
அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு உடனே வழங்கப்படும்
இல்லத்தரசி கூப்பன் என்ற பெயரில் 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பனைப் பயன்படுத்தி வாஷிங் மெஷின், டி.வி., ஃபிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை, வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக்கொள்ளலாம் அல்லது ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு புதிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ரூ.2000 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை.. மாணவிகளுக்கு இனி ரூ.1500! ஸ்டாலின் வாக்குறுதி! -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
என்கிட்டயே அழுது சீன் போடுறீயா? நான் என்ன கல்லா.. டிஆர் பாலுவை முற்றுகையிட்ட எஸ்ஆர் ராஜா ஆதரவாளர்கள் -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
ஒரே சமூகம்.. ஓட்டுகளை பிரிக்கும் சுந்தர் சி.. பிடிஆருக்கு செம டஃப்.. திடீர் வேட்பாளர் ஆனது எப்படி? -
4 மேயர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்.. திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இருக்கும் மெகா ட்விஸ்ட்! -
விஜயபாஸ்கரை பார்த்து பயம்.. செந்தில் பாலாஜிக்கு தில் இருக்கா.. கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தடாலடி -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி












Click it and Unblock the Notifications