கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம்.. திமுக செயல் திட்டக் கூட்டத்திற்கு பின் ஸ்டாலின் பேட்டி
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை: நாடாளுமன்ற கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்துள்ளார்.
அடுத்த வருடம் லோக் சபா தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் தற்போது திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நடைபெற்று உள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.
க. அன்பழகன் உள்ளிட்ட திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுவின் உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த கூட்டத்திற்கு பின் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அதில், நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல் குறித்து உயர் நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்தோம். யாருடன் கூட்டணி வைப்பது குறித்து விவாதித்தோம். இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடந்தால் எப்படி சமாளிப்பது என்று ஆலோசனை நடத்தி வருகிறோம். இதுகுறித்து தோழமை கட்சிகளுடன் விவாதிப்போம்.
தமிழகத்தில் நடக்க உள்ள இடைத்தேர்தல்கள் குறித்தும் விவாதித்தோம். தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் இதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளார்.
-
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் சீரியல்.. அதுவும் இதுதான் காரணமா? பீல் பண்ணும் ரசிகர்கள் -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்!












Click it and Unblock the Notifications