அறிவாலயத்தில் எதிரொலித்த "கோஷம்.." ஜெர்க்கான சுப்புலட்சுமி! கேமராமேன்களை வெளியேற்றி பூட்டப்பட்ட கதவு
சென்னை: அண்ணா அறிவாலயத்திலேயே ஆவேச குரல்கள் எதிரொலித்ததால் திமுக தலைவர்கள் ஷாக்காகிவிட்டனர். தொலைக்காட்சி கேமரா மேன்களை வெளியே அனுப்பி கதவை சாத்தினர்.
இத்தனைக்கும் காரணம் தொகுதி பங்கீட்டில் நிலவும் இழுபறிதான். ஒரு பக்கம், அதிமுக கூட்டணியில் வேட்பாளர்கள் லிஸ்ட் வெளியாகிவிட்டது. ஆனால் திமுக தனது தொகுதிகளை இன்னும் வெளியிடவில்லை.
காங்கிரஸ் உட்பட பல கூட்டணி கட்சிகளுடன் நிலவும் இழுபறிதான் இதற்கு காரணம்.

திமுகவினர் கோஷம்
இந்த நிலையில்தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்த அறிவாலயம் வந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், எ.வ.வேலு, ஐ.பெரியசாமி ஆகிய பேச்சுவார்த்தை குழுவினருக்கு சொந்தக்கட்சி பிரமுகர்களே அதிர்ச்சியளித்தனர். பொன்னேரி தொகுதியிலிருந்து வந்திருந்த திமுகவினர் அந்த தொகுதியை இ.கம்யூனிஸ்டுக்கு ஒதுக்க கூடாது என கோஷமிட்டனர்.

அண்ணா அறிவாலயம்
அதுவும், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சி தொண்டர்கள் இப்படி ஆவேசமாக கோரிக்கையை முன்வைத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. பொன்னேரி தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்யக் கூடாது என்று கோஷம் போட்டனர் அவர்கள். இதனால் அந்த சம்பவங்களை வீடியோவாக எடுக்க டிவி நிருபர்கள் முற்பட்டனர். ஆனால் திமுக நிர்வாகிகள் கோபமடைந்தனர். "வெளியே போங்க.. கதவை பூட்டுங்க.." என கத்தியபடி டிவி கேமரா மேன்களை வெளியே அனுப்பி கதவை சாற்றிவிட்டனர்.

தலைமையகத்தில் போராட்டம்
இதனால் அறிவாலயத்தில் பரபரப்பு நிலவியது. பிற கட்சியினர் தங்களது வேட்பாளர்கள் தொடர்பான அதிருப்தியை தங்கள் தொகுதிகளில் காட்டி போராட்டம் நடத்திவரும் நிலையில், அறிவாலயத்திலேயே திமுகவினர் தர்ணா நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணிகள்
இதனிடையே, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு, சூலூர், பெருந்துறை, திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கான தொகுதியும் இன்று அறிவிக்கப்பட்டது.
மணப்பாறை, பாபநாசம் தொகுதிகளில் அந்த கட்சி போட்டியிட உள்ளது.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்!












Click it and Unblock the Notifications