பாஜகவின் பதறல்.. அதிமுகவின் திணறல்.. "ஆஃப்" செய்ய போகும் ஸ்டாலின்.. விரைவில் முக்கிய அறிவிப்பு?
நீட் தேர்வு தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் என அன்பில்மகேஷ் தெரிவித்துள்ளார்
சென்னை: பாஜக ஒரு பக்கம், அதிமுக, பாமக மறுபக்கம் என திமுகவை சரமாரி விமர்சித்து கொண்டிருக்கும்போது, முக்கிய தகவலை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.. வரப்போகும் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட போகிறாராம்..!
நீட் தேர்வுக்கு தமிழகத்தில் ஆரம்பம் முதலே எதிர்ப்பு இருந்து வருகிறது.. பொதுமக்கள் மட்டுமில்லாமல் அரசியல் கட்சிகளும் நீட்டை எதிர்த்தே வருகின்றனர்..
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று குரலெழுப்பப்பட்டாலும், நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில்தான், நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்களும் பயிற்சி பெற்று வந்தனர்.

போராட்டம்
இதனால், கடந்த அதிமுக ஆட்சியை திமுக அளவுக்கு அதிகமாகவே விமர்சித்தது.. பல போராட்டங்களையும் நடத்தியது... அதிமுக அரசுக்கு திமுக கொடுத்து வந்த பெரும் அழுத்தங்களுள் இந்த நீட் தேர்வு விவகாரமும் ஒன்று என்பதை மறுக்க முடியாது.. திமுக ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கும் என்று உறுதியையும் தனது பிரச்சாரங்களின்போது தெரிவித்து வந்தது.

பாஜக
நீட் தேர்வை ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்துவிடுவோம் என்று சொன்ன திமுக, அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட நீட் பயிற்சி மையங்களை தொடர்ந்து நடத்த போவது தற்போது விவாதமாக உருவெடுத்து வருகிறது.. அதிமுக, பாமக போன்ற கட்சிகள் இதை சுட்டிக்காட்டி வருகின்றன.. அதிலும் பாஜக இந்த விஷயத்தை லேசில் விடுவதாக இல்லை.. தொடர்ந்து திமுகவை சாடி வருகிறது.. திமுக என்றில்லை, நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசும், சூர்யாவை கூட விட்டு வைக்கவில்லை.

கரு.நாகராஜன்
"நீட் தேர்வு தொடர்பாக சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு தெளிவாகவே இருக்கிறது.. அதனால் நீட் வழக்கில் தெளிவாக ஆராயப்பட்டு, யாருக்கும் பாதிப்பில்லை, சமூக நீதி பாதுகாக்கப்படும் என்ற அம்சங்களை ஆராய்ந்துதான் கோர்ட் தீர்ப்பு தெளிவாக வழங்கப்பட்டுள்ளது... ஆனால், தமிழகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது... இந்த குழு திமுகவின் குழுவா? தமிழக அரசின் குழுவா?" என்று தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கேட்ட கேள்வியையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.

அன்பில் மகேஷ்
இப்படிப்பட்ட சூழலில்தான், நீட் குறித்த ஒரு நம்பிக்கை வார்த்தையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.. செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசும்போது, "தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைமையை நினைத்தால் ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. ஆசிரியராக இருந்தவர்கள் பேக்கரிகளிலும், பெயிண்டராக வேலை செய்யும் வீடியோ பதிவையும் எனக்கு அனுப்பி வைக்கிறார்கள்..

பட்ஜெட் கூட்டத்தொடர்
அதை பார்க்கும்போது, ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது.. நிச்சயமாக தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு முதல்வரிடம் பேச இருக்கிறேன்.. தமிழகத்தில் எந்த காலகட்டத்திலும் நீட் தேர்வை நுழைய விடமாட்டோம். அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவோம்.. வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதல்வர், நீட் குறித்து முக்கிய முடிவுகளை அறிவிப்பார்" என்றார்.

என்னவா இருக்கும்?
முக்கிய முடிவு என்று அமைச்சர் சொன்னாலும், அது என்ன முடிவு என்று தெரியவில்லை.. ஆனால் நீட் தேர்வை நுழைய விட மாட்டோம் என்பதில் திமுக இந்த நிமிஷம் வரை உறுதியாக இருக்கிறது என்று மட்டும் தெரிகிறது.. மேலும், ஒவ்வொரு விஷயத்திலும், பார்த்து பார்த்து தன் மீது விமர்சனங்கள் வந்துவிடக்கூடாது என்று திமுக அரசு செயல்பட்டு வரும் நிலையில், நிச்சயம் நீட் குறித்த முடிவிலும் மக்களுக்கு சாதகமான முடிவே எடுக்கப்படும் என்று தெரிகிறது.. பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலினின் அந்த அறிவிப்பு என்னவா இருக்கும்?! பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications