அப்படியே "அனிதா"வை இடுப்பில் கை வைத்து.. "லட்டு" போல தூக்கி சென்ற மீனவர்.. ஏன் இப்படி!?!
அனிதா ராதாகிருஷ்ணனை தோளில் தூக்கி சுமந்து வந்தனர் மீனவர்கள்
சென்னை: அப்படியே அலேக்காக லட்டு மாதிரி "அனிதா"வை, மீனவர் ஒருவர் தூக்கி இடுப்பில் வைத்து கொண்டார்.. இன்னொருத்தர் தாங்கி பிடித்து கொண்டார்.. இப்படி ஒரு சம்பவம் பழவேற்காடு பகுதியில் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் ஒரு முகத்துவாரம் உள்ளது.. அதாவது கடலும் ஏரியும் இணையும் முகத்துவாரம் பகுதி.. ஆனால், அது தற்போது மணல்மேடு ஆகிவிட்டது.
இந்த மணல்மேடு அங்குள்ள மீனவர்களுக்கு பெரும் தடையாக இருந்துள்ளது.. இந்த மணல்மேட்டை கடந்து அவர்களால் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை.. இதனால் அவர்களின் வாழ்வாதாரமும் பாதித்தது.

மீன்வளத்துறை
இந்த விஷயம் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தெரியவந்தது.. அதனால், அந்த மணல்மேட்டை ஆய்வு செய்ய பழவேற்காடு ஏரிக்கு வந்தார்.. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், எம்எல்ஏக்களுடன் ஒரு படகில் ஏறி கொண்டு, சம்பந்தப்பட்ட முகத்துவாரத்துக்கு சென்றார்.

ஆய்வு
இப்படி மொத்தம் 30 பேர் ஏறியிருக்கிறார்கள்.. இதனால் பாரம் தாங்காமல் அந்த படகு, ஒருபக்கமாக சாயத்தொடங்கியது.. இதனால், படகிலிருந்தவர்களுக்கு தூக்கி வாரிப்போட்டது.. இதையடுத்து, அமைச்சர் பயணித்த படகில் இருந்த சிலரை வேறொரு படகில் ஏற்றினர்... அதற்கு பிறகு முகத்துவாரம் பகுதிக்கு வந்தார்.

மீனவர்கள்
அனிதா வந்திருப்பது தெரிந்ததுமே அந்த பகுதி மக்கள் அங்கு குவிந்துவிட்டனர்.. தங்களுக்கு நிரந்தர முகத்துவாரம், மீன்பிடிதுறைமுகம் இதெல்லாம் வேண்டும் என்று மீனவர்கள் நிறைய கோரிக்கைகளை வைக்கவும், அனைத்தையும் விரைவில் நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் உறுதி அளித்தார்.

வைரல் போட்டோ
அதற்கு பிறகு, அனைவரும் கரைக்கு திரும்பினர்.. ஆனால், அமைச்சரின் கால் கடல்நீரில் நனைந்துவிடக்கூடாது என்று, அங்கிருந்த 2 மீனவர்கள் அனிதாவை டக்கென தூக்கி கொண்டனர்.. ஒருவர் அனிதாவை இடுப்பில் வைத்து கொண்டார்.. இன்னொருத்தர் அனிதாவை கீழே விழாதவாறு தாங்கி பிடித்தார்.. இப்படியே அமைச்சரை சுமந்து கொண்டு, தண்ணீரில் அவரது கால் படாமல் கொண்டுவந்து கரை சேர்த்தனர்..!
அமர்க்களம்தான் போங்க!

விளக்கம்
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, அமைச்சரே ஒரு விளக்கமும் தந்துள்ளார்.. என்னை தூக்கி செல்லுங்கள் என்று யாரிடமும் நான் சொல்லவில்லை.. மீனவர்களே அன்பு மிகுதியால் என்னை தூக்கி சென்றனர் என்று நெகிழ்ச்சிடன் கூறியுள்ளார்.
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications