Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முதல்வர் ஸ்டாலின் 16 அடி பாய்கிறார்.. அவரது மகன் 32 அடி பாய்கிறாரே".. தாறுமாறாக புகழ்ந்த அமைச்சர்

உதயநிதி ஸ்டாலினை திமுக அமைச்சர் காந்தி பாராட்டி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாய் 16 அடி பாய்ந்தால் குட்டி 32 அடி பாயும் என்பார்களே, அதுபோல, ஸ்டாலின் 16 அடி பாய்ந்தால், அவரது மகன் 32 அடி பாய்வது போல் செயலாற்றுகிறார்" என்று அமைச்சர் காந்தி புகழ்ந்து பாராட்டி உள்ளார்.

'சட்டசபையில் யாரையும் புகழ்ந்து அவை நேரத்தை வீணடிக்க வேண்டாம், எதையும் அளவோடு வைத்துக் கொள்ளுங்கள்' என்று முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும் எச்சரிக்கை விடுத்திருந்தார்..

ஆனால் அதையும் மீறி ஒருசிலர் தொடர்ந்து முதல்வரையும், உதயநிதியையும் பாராட்டினர்..அதில் ஒருவர்தான் அமைச்சர் நாசர்.. உதயநிதி ஸ்டாலினை பாராட்டி சட்டசபையில் பேசிய வீடியோவும் வெளியானது.

 அமைச்சர் நாசர்

அமைச்சர் நாசர்

"கல்லுக்கும் உங்களுக்கும் என்ன உறவோ தெரியவில்லை... உங்களின் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி புரட்டி போட்டது தமிழ் திரை உலகை.. ஒரே ஒரு செங்கல் புரட்டி போட்டது ஆட்சி அதிகாரத்தை.. ! முன்பெல்லாம் சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு போனால் தோனி வந்தால் தான் கூட்டம் வரும்... இப்ப நம்ம அருமை சகோதரர் உதயநிதி வந்தாலே கூட்டம் வருகிறது" என்று சட்டசபையில் வெகுவாக பாராட்டினார் அமைச்சர் நாசர். இந்த பேச்சையும் எதிர்தரப்பினர் விமர்சித்தனர்.

சட்டசபை

சட்டசபை

சட்டசபையில்தானே பாராட்டி பேசக்கூடாது, பொதுவெளியில் பேசுகிறோம் என்று திமுக அமைச்சர்கள் முடிவெடுத்து விட்டனர் போலும்.. இப்போது அமைச்சர் காந்தி, உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளார்.. ராணிப்பேட்டை மாவட்ட திமுக கட்சி தலைமை அலுவலகத்தில் வாலாஜா ஒன்றியத்தில் திமுக சார்பில் ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

அறிமுகம்

அறிமுகம்

இதில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், கைத்தறி துணிநூல் துறை அமைச்சருமான காந்தி கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்... அப்போது அவர், "திமுக பொறுப்பேற்று 5 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் சொன்ன வாக்குறுதிகளை மட்டும் இல்லாமல் எல்லாவற்றையும் நிறைவேற்றிக் கொண்டிருப்பவர் நம்முடைய முதல்வர் ஸ்டாலின்.. ஒவ்வொரு நாளும் புதிய திட்டங்களை அறிவிப்பதால் உலக அளவில் அவர் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

Recommended Video

    தேர்தல் வாக்குறுதி..505ல் 202 நிறைவேத்தியாச்சு: எடப்பாடிக்கு முதல்வர் ஸ்டாலின் பக்கா பதிலடி!
     ஆட்சி

    ஆட்சி

    கடந்த காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக 60% வெற்றி பெற்றது.. ஆனால் இப்போது திமுக ஆட்சியில் நடைபெறும் இந்த உள்ளாட்சித தேர்தலில் 100% வெற்றி பெற வேண்டும்...இனிவரும் காலங்களில் 50 வருடங்களுக்கு தமிழகத்தில் திமுகவின் ஆட்சியே தொடரும்.. வேறு ஆட்சி தமிழகத்தில் அமைய வாய்ப்பில்லை..

    வீடியோ

    வீடியோ

    தாய் 16 அடி பாய்ந்தால் குட்டி 32 அடி பாயும் என்பார்களே, அதுபோல, ஸ்டாலின் 16 அடி பாய்ந்தால், அவரது மகன் 32 அடி பாய்வது போல் செயலாற்றுகிறார்" என்றார்.. ஒரு சட்டமன்ற திமுக எம்எல்ஏவை, அதுவும் சென்னையில் சேப்பாக்கத்தின் எம்எல்ஏவை, ராணிப்பேட்டையில் மாநில அமைச்சர் புகழ்ந்து பாராட்டும் இந்த பேச்சைதான் இணையத்தில் பலரும் வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+